புரட்டியெடுத்த தனிமை.. ஹைதராபாத் 36 வயது ஐடி ஊழியரா இப்படி? சொத்துகளை எழுதிவைத்த உருக்கமான கடிதம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: வாழ்க்கையில் சில நேரங்களில் மனிதர்களைச் சுற்றி எத்தனையோ பேர் இருந்தாலும், தனிமை மட்டும் அவர்களை வாட்டி வதைக்கும். அப்படி தனிமையில் தவித்து வந்த 36 வயது ஐடி பெண்ணின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் இப்போது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில் உள்ள கோவிந்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கஷெட்டி சிந்துஜா.. 36 வயதாகிறது.. இவரது பெற்றோர் வெங்கட் ரெட்டி மற்றும் பத்மா.. இவருக்கு ஒரு சகோதரரும் உள்ளார்.

HYDERABAD

ஹைதராபாத் ஐடி பெண்

ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக் சிட்டியில் செயல்பட்டு வரும் முன்னணி சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் சிந்துஜா.. கடந்த 2015ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால், குடும்பத் தகராறு காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கணவரை பிரிந்த அவர், கடந்த 18 மாதங்களாக ஹைதராபாத் மியாபூர் பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

இந்ந்லையில் சம்பவத்தன்று, வேலை விஷயம் தொடர்பாக பேசுவதற்கு சிந்துஜாவின் சக ஊழியர் ஒருவர் அவரை போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால், பலமுறை அழைத்தும் சிந்துஜாவிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

அப்பார்ட்மெண்ட் அதிர்ச்சி

இதனால் சந்தேகமடைந்த அந்த சக ஊழியர், சிந்துஜா தங்கியிருந்த மியாபூர் அடுக்குமாடி குடியிருப்பிற்கு நேரில் சென்று பார்த்தார். அப்போது, சிந்துஜா தனது வீட்டின் ஃபேனில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக மியாபூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சிந்துஜாவின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினருக்குச் சிந்துஜா எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.

உருக்கமான வேண்டுகோள்

அந்தக் கடிதத்தில், கடந்த 18 மாதங்களாகத் தான் எதிர்கொண்டு வந்த கடுமையான தனிமை மற்றும் மன அழுத்தம் காரணமாகவே இந்த விபரீத முடிவை எடுப்பதாகச் சிந்துஜா குறிப்பிட்டுள்ளார்.

தனது வங்கிக் கணக்கில் உள்ள சேமிப்புப் பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார். தன்னிடம் உள்ள சொத்துகள் அனைத்தையும் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் எழுதியுள்ளார். அதே நேரத்தில், சர்ச்சையில் உள்ள சொத்துகள் தொடர்பான நீதிமன்ற வழக்குகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனிமை கொடுமை

தனிமை மற்றும் மன அழுத்தமே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மியாபூர் காவல்துறையினர், சிந்துஜாவின் குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 4 மாதங்களாக தனிமை, மன அழுத்தத்தால் அவதிப்பட்டதுடன், அந்தச் சூழ்நிலையைத் தன்னால் சமாளிக்க முடியவில்லை என்பதால் சிந்துஜா தற்கொலை முடிவை எடுத்துள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது.. தனிமையில் வாழ்ந்து வந்த ஒரு பெண், தனது சொத்துகளையும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக வழங்க விரும்பியுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+