டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு நடக்க போகும் நல்ல விஷயம்,.. உயர்நீதிமன்றம் சூப்பர் உத்தரவு
மதுரை: தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்பும் வகையில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. பணி நியமன அறிவிப்பிற்கு முன்னதாகவே குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும் OMR தாள் நகலை டிஎன்பிஎஸ்சி வெளியிட உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பினை கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. 6244 காலி பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தார்கள். இதில் 15.8 லட்சம் பேர் இந்த தேர்வை அண்மையில் எழுதினார்கள்.

இந்த வருடம் எப்போதும் இல்லாத அளவிற்கு தேர்வு கடினமாக இருந்தது. இதில் தமிழைப் பொறுத்தவரை இலக்கணத்தில் புதிதாக சில கேள்விகள் இந்த ஆண்டு கேட்கப்பட்டிருந்தது. இலக்கணம், இலக்கியத்தில் அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. வழக்கமாக 25 மதிப்பெண்கள் கணக்கு கேள்விகள் கேட்கப்படும்.
ஆனால் இந்த ஆண்டு 27 கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். அதேபோல் பொது அறிவிலும் சில கேள்விகள்மிக கடினமாக இருந்தது என்று தேர்வர்கள் கூறினார்கள். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போதுகட் ஆப் கடந்த முறையைவிட இந்த முறை குறைய வாய்ப்பு உள்ளதாக டிஎன்பிஎஸ்சிதேர்வர்கள் கூறி வருகிறார்கள்.இந்நிலையில் குரூப் 4 தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த முத்துலட்சுமி, திருச்சி முத்து செல்வம் உள்ளிட்ட குரூப் 4 தேர்வர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 காலியிடங்களை நிரப்பும் வகையில், ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 30ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் குரூப் 4 எழுத்துத்தேர்வு கடந்த ஜூன் 9ஆம் தேதி நடந்தது. வழக்கமாக டிஎன்பிஎஸ்சி பணி நியமன செயல்முறை முடிந்த பிறகுதான் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும் OMR தாள் நகலை வெளியிடும். ஆனால் இந்த முறை பணி நியமன அறிவிப்பிற்கு முன்னதாகவே குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும் OMR தாள் நகலை டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும்.
ஏனெனில் டிஎன்பிஎஸ்சி பணி நியமன செயல்முறை முடிந்த பிறகு குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும் OMR தாள் நகலை வெளியிடும் போது தேர்வர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, சமீபத்தில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும் OMR தாள் நகலை, பணி நியமன பட்டியல் வெளியிடுவதற்கு முன் வெளியிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, அண்மையில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும் OMR தாள் நகலை, பணி நியமன பட்டியல் வெளியிடுவதற்கு முன் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதன் மூலம் பணி நியமனத்திற்கு முன்பே குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும் OMR தாள் நகலை பார்வையிட தேர்வர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதன் மூலம் தாங்கள் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் தவறுகளை அறிய தேர்வர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல் ஏதேனும் தவறு நடந்திருந்தால் தேர்வர்கள் முறையிடவும் முடியும் என்று கூறப்படுகிறது.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications