IT Jobs: அனுபவம் தேவையில்லை.. காக்னிசண்ட் நிறுவனத்தில் 25,000 காலியிடங்கள்.. குட்நியூஸ்
சென்னை: கல்லூரி படிப்பை முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் 25,000 பேரை வேலைக்கு எடுக்க உள்ளதாக காக்னிசண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது ஐடி நிறுவனங்களில் ஏஐ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் காக்னிசண்ட் ஐடி நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பது ஐடி துறையில் கால்பதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு குட்நியூஸாக அமைந்துள்ளது.
ஐடி துறை.. தற்போதைய இளைஞர்கள் அதிக கால்பதிக்கும் துறைகளில் ஒன்றாக உள்ளது. நல்ல சம்பளம் கிடைப்பது தான் இதற்கு முக்கிய காரணம். ஆனால் கடந்த ஆண்டு முதல் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு வருகையால் பல ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இதனால் இளைஞர்கள் உள்பட ஐடி துறையில் பணியாற்றி வருவோருக்கு ஒருவித பயம் உருவாகி உள்ளது. குறிப்பாக அமேசான், டிசிஎஸ், மைக்ரோசாப்ட் உள்பட பல நிறுவனங்களில் தொடர்ந்து பணியாளர்களை நீக்கி வருவது மற்ற நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
25,000 பணியிடங்கள்
இப்படியான சூழலில் தான் காக்னிசண்ட் ஐடி நிறுவனம் குட்நியூஸை தெரிவித்துள்ளது. காக்னிசண்ட்.. நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனம் பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் 2026ம் ஆண்டில் மட்டும் காக்னிசண்ட் நிறுவனம் கல்லூரி படிப்பை முடித்து பணி அனுபவம் இல்லாதவர்களுக்காக 25,000 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏஐ அச்சத்துக்கு நடுவே
பல நிறுவனங்களும் ஏஐ நோக்கி செல்லும் நிலையில் காக்னிசண்ட் சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது ஐடி துறையில் கால்பதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு குட்நியூஸாக அமைந்துள்ளது. இதுபற்றி காக்னிசண்ட் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛ஐடி துறையில் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்து வருகிறது.
நிறுவனத்தின் நோக்கம்
இதனால் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பணியாற்றும் வகையில் 24 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேரை 2026ல் பணிக்கு தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இண்டர்வியூ இந்த ஆண்டிலேயே இருக்கும். ஏஐ-யை பயன்படுத்தி ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதை விட அதை கடைசி நிலை வரை பயன்படுத்தி வேலையை எப்படி வேகமாக மேற்கொள்வது என்பதில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட அதிகம்
அதன்படி இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் புதிய பட்டதாரிகளைத் தொடர்ந்து பணியமர்த்த போவதாக காக்னிசென்ட் தெரிவித்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டில் காக்னிசண்ட் நிறுவனம் சுமார் 20 ஆயிரம் ஃப்ரசர்களை பணிக்கு எடுத்தது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் கிளைன்ட் பேசிங் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்நிலையில் தான் 2026ம் ஆண்டில் ப்ரசர்களுக்கான பணி வாய்ப்பை 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக காக்னிசண்ட் நிறுவனம் உயர்த்தி அறிவித்துள்ளது.
லாபம் அதிகரிப்பு
மேலும் கடந்த ஆண்டு காக்னிசண்ட் நிறுவனம் தனது பணியாளர்களின் எண்ணிக்கை 4 சதவீதம் வரை உயர்த்தியது. அதேபோல் ஒரு ஊழியருக்கான வருவாய் சுமார் 5 சதவீதமும், ஊழியருக்கான லாபம் சுமார் 8 சதவீதமும் அதிகரித்துள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications