IT JOBS: அனுபவம் வேண்டாம்.. Deloitte ஐடி நிறுவனத்தில் வேலை ரெடியா இருக்கு.. பெங்களூர் - ஹைதராபாத்தில் பணி
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டெலாய்ட் சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
டெலாய்ட் (Deloitte) நிறுவனத்தில் தற்போது அனலிஸ்ட் டிரெய்னி (Analyst Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய பணி அனுபவம் தேவையில்லை.

2025ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம்செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 60 சதவீதம் அல்லது 6.5 சிஜிபிஏ வைத்திருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பத்தாரர்கள் பிஇ, பிடெக் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். அதிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ், அலைட் கம்யூட்டர் சயின் பிரான்சஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி முடித்தவராக இருக்க வேண்டும். அதேபோல் 5 ஆண்டுக்கான ஒருங்கிணைந்த எம்இ, எம்டெக் படிப்பை படித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். எம்சிஏ முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோர் தனியாகவும், டீமாகவும் சேர்ந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் பேச தெரிந்திருக்க வேண்டும். உலகளாவிய கிளைன்ட் உடன் பேச தயாராக இருக்க வேண்டும். ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற ரெடியாக இருக்க வேண்டும். மேலும் ஏதாவது ஒரு புரோகிராமிங் லேங்குவேஜ் தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் மைக்ரோசாப்ட் எக்றால், வேர்ட், பவர்பாயிண்ட் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் முதலில் அப்ரண்டீஸ்ஷிப் சட்டத்தின் கீழ் பணியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். ஓராண்டு Probation டைமாக இருக்கும். அதன்பிறகு அனலிட்டிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் (ரைட்டிங், ஸ்பீக்கிங் மற்றும் பிரசென்டேஷன்) உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்.
குறிப்பாக விண்ணப்பம் செய்வோர் இந்தியா உள்பட வேறு எந்த இடத்திலும் கடந்த 6 மாதத்தில் டெலாய்ட் நிறுவன இண்டர்வியூவில் பங்கேற்று இருக்க கூடாது. தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூர், ஹைதராபாத்தில் உள்ள அலுவலகங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications