டிகிரி போதும்.. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
சென்னை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் அசிஸ்ட்டன்ட் ஆபிசர் வேலைக்கான காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க டிகிரி முடித்திருந்தால் போதும். விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனமான இது இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தில் மொத்தம் 33,500 பேர் பணியாற்றுகின்றனர். ஆண்டுக்கு ரூ.1,313 கோடியை லாபமாக இந்நிறுவனம் ஈட்டுகிறது. இந்நிலையில் சமீப நாட்களாக நிறுவனத்தில் அசிஸ்ட்டன்ட் ஆபிசர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மட்டுமல்லாது இதில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

இதில் விண்ணப்பிக்கும் நபர்கள் நாட்டின் எந்த மூலையிலும் பணியமர்த்தப்படுவார்கள். அதேபோல விண்ணப்பதாரர் 30 வயது நிரம்பியிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கமான https://www.iocl.com/க்கு சென்று அதில் கெரியர் எனும் ஆப்ஷனுக்குள் சென்று விண்ணப்பிக்க வேண்டும். அல்லது https://iocl.com/latest-job-opening எனும் வெப்சைட்டுக்கு சென்றும் விண்ணப்பிக்கலாம்.
அதேபோல விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இயக்கும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்கள் Merit List, Document Readiness, Short Listing Process மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அதேபோல விண்ணப்பதாரர்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு தளர்வு உள்ளிட்ட விவரங்கள் https://ioclapply.com/Images/Notifications/IOCL-AO-2023-Advertisement.pdf எனும் இணைய பக்கத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications