15000 பேருக்கு வேலை.. சென்னையில் காத்திருக்கும் மிகப்பெரிய குட்நியூஸ்.. வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை: வேலை வேண்டும், அதுவும் நல்ல வேலை வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும். குறிப்பாக சென்னையில் பலருக்கும் படிப்பிற்கு ஏற்ற வேலை தேடுவது அதிகமாக உள்ளது. அவர்களுக்காக சென்னை கொட்டிவாக்கத்தில் நவம்பர் 25-ஆம் தேதி மிகப்பெரிய அளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற போகிறது.
சென்னையை பொறுத்தவரை பல்வேறு துறைகளில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். பல நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான திறமையான பணியாளர்களை தேடி அலைகின்றன. இதேபோல் சென்னையில் பல இளைஞர்கள் வேலை தேடி அலைகிறார்கள். அவர்களை பொறுத்தவரை நல்ல சம்பளம், பணி பாதுகாப்பு, வேலையில் குறைவான ரிஸ்க் ஆகியவை இலக்காக உள்ளது.

இப்படியான சூழலில் பலரும் சென்னையில் எங்கு வேலை காலியாக உள்ளது. நமக்கு பிடித்த வேலையா, சம்பளம் எவ்வளவு என்று நிறையவே யோசிக்கிறார்கள். நிறுவனங்களுமே தங்களுக்கு ஏற்ற பணியாளர்களை தேடி அலைகின்றன. இருதரப்பையும் இணைக்கும் வகையில் சென்னையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் நவம்பர் 25ம் தேதி அதாவது நாளை மறுநாள் நடைபெற போகிறது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை சாா்பில் சென்னை மாவட்டத்தின் 4-ஆவது மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் கொட்டிவாக்கம் நெல்லை நாடாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (நவ.25) காலை 8 முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 15,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவா்களைத் தோ்வு செய்யவுள்ளன. இந்த முகாமில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி வரை, பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு படித்தவா்கள், ஐடிஐ, தொழிற்கல்வி, பொறியியல் பட்டம் பெற்றவா்கள், கணினி இயக்குபவா்கள், தையல்கற்றவா்கள் என அனைத்து தகுதியுள்ள நபா்களும் கலந்து கொள்ளலாம்.
முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இந்த முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள், வங்கிக் கடன் வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்பும் நபா்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது இணையதள முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம்" இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications