சென்னை திருவொற்றியூர் தியாகராஜ கோயிலில் வேலை.. 58 ஆயிரம் சம்பளம்! 10 ஆம் வகுப்பு தகுதி தான்!
சென்னை: இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர், எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர் என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தது மாதம் ரூ.15,700 முதல் 58 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
சென்னை திருவொற்றியூரில் புகழ்பெற்ற தியாகராஜ சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படும்.

பணியிடங்கள் விவரம்:
அந்த வகையில் தற்போது பல்வேறு பிரிவுகளில் 10 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இளநிலை உதவியாளர், எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இளநிலை உதவியாளர் - 02 இடங்கள்,
எழுத்தர் - 01 இடம்,
அலுவலக உதவியாளர் - 01 இடம்,
காவலர் - 04 இடங்கள்,
வேத பாராயணம் - 01 இடம்,
உதவி சமையலர் (சுயம்பாகம்) - 01 இடம் என மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, இளநிலை உதவியாளர் மற்றும் வசூல் எழுத்தர் பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது.
காவலர் மற்றும் வேத பாராயணம் பணிகளுக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருப்பதுடன், அரசு அல்லது சமய நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப் பள்ளி அல்லது வேத பாடசாலையில் குறைந்தது மூன்று ஆண்டுகள் தொடர்புடைய துறையில் படித்ததற்கான சான்றிதழ் கட்டாயமாகும்.
உதவி சமையலர் (சுயம்பாகம்) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அத்துடன், கோயில் மரபுகளின்படி பிரசாதம் மற்றும் நிவேதனம் தயாரிக்கத் தெரிந்திருப்பது அவசியமாகும்.
வயது வரம்பு:
18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
சம்பளம் எவ்வளவு?
* இளநிலை உதவியாளர் மற்றும் வசூல் எழுத்தர் பணிகளுக்கு மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை வழங்கப்படும்.
* அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் பணிகளுக்கு ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை சம்பளம் கிடைக்கும்.
* வேத பாராயணம் பணிக்கு ₹15,700 முதல் ₹50,000 வரை வழங்கப்படும்.
* உதவி சமையலர் (சுயம்பாகம்) பணிக்கு ₹10,000 முதல் ₹31,500 வரை வழங்கப்படும்.
நேர்காணம் மூலமாக தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பப் படிவங்கள் மற்றும் விதிமுறைகள், நிபந்தனைகள் குறித்து hrce.tn.gov.in இணையதளத்தில் விரிவாகப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முன் அனைத்து விவரங்களையும் கவனமாகப் படித்துப் புரிந்துகொள்வது அவசியம்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பப் படிவங்களை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://thiruvottiyurvadivudaiamman.hrce.tn.gov.in/) பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2026 ஜனவரி 30 ஆகும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான ஆவணங்களின் நகல்களுடன், 'உதவி ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில்,
திருவொற்றியூர்,
சென்னை - 600019' என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ₹50/- அஞ்சல் தலையுடன் கூடிய சுய விலாசமிட்ட உறை ஒன்றையும், பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ₹75/- அஞ்சல் தலையுடன் கூடிய உறையையும் அனுப்ப வேண்டும்.
-
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications