220 அடி ஆழ போர்வெல்லில் விழுந்த 4 வயது சிறுவன் மீட்பு.. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் பிரிந்த உயிர்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானாவில் நேற்று காலையில் 220 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் இன்று அதிகாலையில் உயிருடன் மீட்கப்பட்டான். உடனடியாக அவரை மீட்பு படையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுவன் இறந்ததாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டம் தானியோரா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சித். இவருக்கு 4 வயதில் மகன் இருந்தார். அவனது பெயர் நிர்வைர் சிங். இந்நிலையில் தான் நேற்று காலை 6.30 மணியளவில் மஞ்சித் தனது வயலில் வேலை செய்து வரும் தாத்தா கர்னைல் சிங்கிற்கு உணவு கொண்டு சென்றார்.

borewell haryana

அப்போது மஞ்சித் தனது மகன் நிர்வைர் சிங்கையும் உடன் அழைத்து சென்றார். தாத்தா கர்னைல் சிங் உணவு சாப்பிட்டு கொண்டிருக்க, மஞ்சித் வயதில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது நிர்வைர் சிங் அங்கு விளையாடி கொண்டிருந்தான்.

பக்கத்தில் ஆழ்துளை கிணறு திறந்து கிடந்தது. அதன் ஆழம் 220 அடியாகும். அதன் உள்ளே சகதியை அள்ளி வீசி விளையாடினான் நிர்வைர் சிங். திடீரென்று ஆழ்துளை கிணற்றை எட்டிப்பார்த்தபோது நிர்வைர் சிங் தவறி உள்ளே விழுந்தான். இதுபற்றி அதிர்ச்சி டைந்த மஞ்சித் மற்றும் கர்னைல் சிங் உடனயாக கிராம்ததினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆழ்துளை கிணற்றின் உள்ளே கயிறு போட்டு சிறுவன் நிர்வைர் சிங்கை டி மீட்க முயன்றனர். ஆனால் அது கைக்கெடுக்கவில்லை.

உடனடியாக தீயணைப்பு வீரர்கள், போலீசார், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியை தொடங்கினர். ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் குழி தோண்டி மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது. 21 மணிநேர போராட்டத்துக்கு பிறகு இன்று அதிகாலை 3.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் நிர்வைர் சிங் மீட்கப்பட்டான். அப்போது சிறுவன் உயிருடன் இருந்தான்.

உடனடியாக அம்பாலா கண்டோன்மென்ட்டில் உள்ள மருத்துவமனைக்கு மீட்பு படையினர் கொண்டு சென்றனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்கள் நிர்வைர் சிங் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+