மத்திய அரசு வேலை! 10ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! செம சான்ஸ்! உடனே அப்ளை பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவில் 215 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள், ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட இதர விவரங்களை இங்கே பார்க்கலாம்.

அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு என்பது இந்திய துணை ராணுவ படைகளில் மிகவும் பழமையானது ஆகும். நாட்டின் வடகிழக்கு மற்றும் இந்திய எல்லை பாதுகாப்பு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவில் காலியாக உள்ள 215 பணி இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? ஆகிய விவரங்களை பார்க்கலாம்.

job Jobs Employment

பணியிடங்கள்:

1. மத ஆசிரியர் (RT) - 03
2. ரேடியோ மெக்கானிக் (RM) - 17
3. லைன்மேன் (Lmn) - 08
4. பொறியாளர் உபகரண மெக்கானிக் (EE Mech) - 04
5. எலக்ட்ரீஷியன் மெக்கானிக் வாகனம் - 17
6. மீட்பு வாகன மெக்கானிக் - 02
7. அப்ஹோல்ஸ்டர் - 08
8. வாகன மெக்கானிக் ஃபிட்டர் - 20
9. வரைவாளர் - 10
10. எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் - 17
11. பிளம்பர் - 13
12. ஆபரேஷன் தியேட்டர் டெக்னீசியன் (OTT) - 01
13. மருந்தாளுநர் - 08
14. எக்ஸ்-ரே உதவியாளர் - 10
15. கால்நடை கள உதவியாளர் (VFA) - 07
16. சஃபாய் (தூய்மை பணியாளர்) - 70
என மொத்தம் 205 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி:

பத்தாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வி தகுதி மாறுபடும். உதாரணமாக சஃபாய் பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மெக்கானிக் ஃபிட்டர் போன்ற பணியிடங்களுக்கு துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

ஐடிஐ கல்வித் தகுதி கொண்ட பணியிடங்களுக்கு 18 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவர்களும் 30 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் உண்டு. வயது வரம்பு, கல்வி தகுதி பற்றிய விவரங்களை விண்ணப்பிக்கும் முன்பாக முழுமையாக ஒருமுறை படித்து தெரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வு முறை:

உடல்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்து தேர்வு ஆகியவை அடிப்படையில் தகுதியான விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மருத்துவ பரிசோதனையும் கடைசி கட்ட தேர்வாக நடைபெறும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி, மகளிர் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது. மத ஆசிரியர், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் பதவிகளை தவிர இதர பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கட்டணம் ரூ.100 ஆகும்.

விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள் 22.02.2025 ஆகும். விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள் 22.03.2025 ஆகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.assamrifles.gov.in/onlineapp/Default.aspx

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+