யூனியன் வங்கியில் 2691 பணியிடங்கள்.. உள்ளூரிலேயே வேலை பார்க்க சான்ஸ்! டிகிரி முடிச்சவங்க அசத்துங்க
சென்னை: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் வங்கியில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2,691 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இது குறித்த மேலும் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
நாட்டில் உள்ள முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று யூனியன் பேங்க் ஆப் இந்தியா. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கி நாடு முழுவதும் சுமார் 8 ஆயிரம் வங்கி கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்த வங்கியில் தற்போது அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? ஆகிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: நாடு முழுவதும் மொத்தம் 2,691 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 122 பணியிடங்கள் உள்ளன. கேரளாவில் 118 இடங்களும், கர்நாடகா 305, மகாராஷ்டிரா 296 என பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தால் போதும். விண்ணப்பதாரர்கள் 01.04.2021 க்கு பிறகு டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 28 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வு உண்டு. எஸ்.சி/ எஸ்..டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
தேர்வு முறை: ஆன்லைன் வழியாக தேர்வு நடைபெறும். உள்ளூர் மொழி தெரிந்து இருப்பது அவசியம். எந்தெந்த மாநில பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கின்றோமோ அந்த மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும். எழுத்து தேர்வுக்கு பிறகு மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யபடுவார்கள். ஆன்லைன் எழுத்து தேர்வை பொறுத்தவரை பொது அறிவு, பொது ஆங்கிலம், ரீசனிங்க், கணிணி அறிவு பற்றிய கேள்விகள் இடம் பெற்று இருக்கும்.
சம்பளம் எவ்வளவு: இந்த பயிற்சி பணியிடங்கள் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும். மாதம் ரூ. 15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். வேறு எந்த சலுகைகளும் வழங்கப்படாது. தகுதியும் ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ. 800 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் என்றால் 600 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.400 கட்டனம் ஆகும். ஆன்லைன் வழியாகவே கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய அரசின் அப்ரெண்டீஸ் பயிற்சி தளமான https://nats.education.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை தெரிந்து படித்து தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள இந்த லிங்கை https://www.unionbankofindia.co.in/pdf/Notification-for-Engagement-of-2691-Apprentices.pdf கிளிக் செய்யவும்.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications