நம்ம திருச்சியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்.. இளைஞர்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்
சென்னை: திருச்சியில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் Apprentice எனப்படும் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு எதுவும் இல்லாமல் நேர்முகத் தேர்வு மூலம் மட்டும் இதற்கான பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுத தொழிற்சாலை திருச்சியில் செயல்பட்டு வருகிறது. இதில் Apprentice எனப்படும் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்கள் என இரு தரப்பினருக்கும் தனித்தனியாக Apprentice அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதில் குறிப்பிட்ட காலம் பணிபுரிவதன் மூலம் இந்த துறையில் தேவையான தொழில்நுட்பங்களை ஒருவரால் கற்றுக் கொள்ள முடியும். மேலும், எழுத்துத் தேர்வும் இல்லை என்பதால் தேவைப்படும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மொத்த காலியிடங்கள் - 84
பணி வாரியாக:
Technical Apprentice (for Diploma)- 72 பணியிடங்கள்
Graduate Apprentice - 12 பணியிடங்கள்
கல்வித் தகுதி என்ன:
Technical Apprentice-க்கு விண்ணப்பிக்க மெக்கானிக்கல், சிவில், ECE, EEE, கம்பியூட்டர் சயின்ஸ் ஆகியவற்றில் ஏதாவதொரு ஒரு பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
Graduate Apprentice-க்கு விண்ணப்பிக்க மெக்கானிக்கல், சிவில், ECE, EEE, கம்பியூட்டர் சயின்ஸ் ஆகியவற்றில் ஏதாவதொரு ஒரு பிரிவில் பிஇ அல்லது பிடெக் படித்து முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம் என்ன - மாத சம்பளம் என்று தனியாக வழங்கப்படுவதில்லை. ஆனால், மாத ஊத்தத்தொகை வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை - நேர்முகத் தேர்வு நடைபெறும். அதன் பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் வேலை வழங்கப்படும்.
நேர்முக தேர்வு நடைபெறும் தேதி - அக்டோபர் 1, 2021
நேர்முக தேர்வு நடைபெறும் இடம் - Ordnance Factory, (HRD Section), Trichy - 620016, Ph: 0431-2581291 என்ற இடத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க
www.mhrdnats.gov.in என்ற தளத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications