50 ஆயிரம் வரை சம்பளம்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஏராளமான வேலை
சென்னை : சென்னை உயர்நீதிமன்றத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நல்ல வாய்ப்பை தவறவிட வேண்டாம்.
ஹைகோர்டில் நேரடி தேர்வின் மூலம் அலுவலக உதவியாளர், சோப்தார், சமையல்காரர், காவலாளி, புத்தக மீட்டமைப்பாளர் உள்பட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஏப்ரல் 21ம் தேதிக்குள் வரவேற்கப்படுகிறது.

மொத்த பணியிடங்கள்
விளம்பர அறிவிக்கை எண்.36/2021 14.03.2021
மொத்த காலியிடங்கள்: 367
காலியிடங்கள் முழு விவரம்:
சோப்தார் - 40
அலுவலக உதவியாளர் - 310
சமையல்காரர் - 01
வாட்டர்மேன் - 01
ரூம் பாய் - 04
காவலாளி - 03
புத்தக மீட்டமைப்பாளர் - 02
நூலக உதவியாளர் - 06

வயது வரம்பு
ஊதியம்: மாதம் ரூ.15,700 - 50,000 (Pay Level - 1)
வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ( பொது பிவில் 02.07.1991 பின்பு பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்). பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் எஸ்சி, எஸ்டிசி பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். (அதாவது 02.07.1986 முன்பு பிறந்திருக்க கூடாது, 01.07.2003க்கு பின்பு பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி அற்றவர்கள்)
8ம்வகுப்பு தேர்ச்சி
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வீட்டு பராமரிப்பில் அனுபவம், சமைப்பதில் அனுபவம் போன்ற தகுதிகளை பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 (ஒவ்வொரு பணிக்கு) கட்டணமாக செலுத்த வேண்டும். அதேநேரம் எஸ்சி, எஸ்டி, மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்த ஆதவற்ற விதவைகள் விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதில் முழு விலக்களிக்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.mhc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
-
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications