நோ எக்ஸாம் - தொடக்கமே ரூ.1.25 லட்சம் சம்பளம்! டிகிரி, என்ஜினீயரிங் முடித்தவரா?நபார்டில் நல்ல வேலை
சென்னை: நபார்டு வங்கியில் காலியாக உள்ள ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளத. 62 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதம் குறைந்தபட்சம் ரூ.1.25 லட்சம் முதல் ரூ.4.50 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
விவசாயம் மற்றும் கிராம மேம்பாட்டுக்கான தேசிய வங்கியின் சுருக்கம் தான் நபார்டு (National Bank For Agriculture And Rural Development - NABARD). இந்த வங்கியில் ஏராளமான காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

காலியிடங்கள்: நபார்டில் Specialist Officers பிரிவில் 31 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணி வாரியாக பார்த்தால்
சீப் டெக்னீக்கல் ஆபிசர், ப்ராஜெக்ட் மேனேஜர் (அப்ளிகேஷன் மேனஜ்மென்ட்), அடிஷனல் சீஃப் ரிஸ்க் மேனேஜர், சீனியர் அனலிஸ்ட் (சைபர் செக்யூரிட்டி ஆபரேஷன்), ரிஸ்க் மேனேஜர் (ஐஎஸ் அண்ட் சைபர் செக்யூரிட்டி), கிரெடிட் ஆபிசர், லீகல் ஆபிசர், ஐடிஇஎல் டெவலப்பர், பிசினஸ் அனலிஸ்ட், பவர் பிஐ ரிபோர்ட் டெவலப்பர், ஸ்பெஷலிஸ்ட் - டேட்டா மேனேஜ்மென்ட், பைனான்ஸ் இன்க்கூளுசன் கன்சல்டன்ட் - டெக்னீக்கல், பைனான்ஸ் இன்க்கூளுசன் - பேங்கிங் உள்ளிட்ட பணிகளுக்கு தலா ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும் சீஃப் அக்கவுண்ட் எக்ஸாமினர், ரிஸ்க் மேனேஜர் - கிரெடிட் ரிஸ்க், ரிஸ்க் மேனேஜர் (மார்க்கெட் ரிஸ்க்), ரிஸ்க் மேனேஜர் (ஆபரேஷனல் ரிஸ்க்), சைபர் அண்ட் நெட்வொர்க் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட், டேட்டாபேஸ் அண்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் ஸ்பெஷலிஸ்ட், ஐடி இன்ப்ராஸ்ட்ரக்சர் அண்ட் பேங்கிங் ஸ்பெஷலிஸ்ட், டேட்டா கன்சல்டன்ட் பணிகளுக்கு தலா 2 பேர் என மொத்தம் 31 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: இந்த பணிகளுக்க விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக், எம்எஸ்சி, எம்டெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் டிகிரி, மாஸ்டர் டிகிரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ், என்ஜினீயரிங், மேனேஜ்மெண்ட் சார்ந்த படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு - கல்வி தகுதி: விண்ணப்பம் செய்வோர் 62 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு னெ்பது 2024 ஜனவரி 1ம் தேதி அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ரூ.4.50 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மார்ச் 10ம் தேதிக்குள் நபார்ட் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.800 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் என்றால் ரூ.50 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications