மாதம் ரூ.67,000 முதல் ரூ.1.37 லட்சம்.. என்சிபிஓஆர்-ல் செம வேலைவாய்ப்பு.. யாருக்கெல்லாம் வாய்ப்பு?
சென்னை: கோவாவில் துருவ மற்றும் கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.67 ஆயிரம் முதல் ரூ.1.37 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் துருவ மற்றும் கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் ( National Centre for Polar and Ocean Research or NCPOR) கோவாவின் வாஸ்கோடகாமாவில் இயங்கி வருகிறது. இது இதற்கு முன்பு அண்டார்டிக் மற்றும் கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (NCAOR) என கூறப்பட்டு வந்தது.

இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது சயின்டிஸ்ட் மற்றும் அக்கவுண்ட் ஆபிசர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி சயின்டிஸ்ட் - எப் பணிக்கு ஒருவர், சயின்டிஸ்ட் - இ, சயின்டிஸ்ட் -சி பணிக்கு தலா 2 பேர், சயின்டிஸ்ட் - டி பணிக்கு 8 பேர், அக்கவுண்ட் ஆபிசர்/சீனியர் மேனேஜர் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சயின்டிஸ்ட் பணிக்கு ஜியாலஜி, அப்ளைட் ஜியாலஜி, எர்த் சயின்ஸ், மரைன் ஜியேபிசிக்ஸ், மரைன் ஜியாலஜி, மரைன் சயின்ஸ், பிசிகல் ஓசனோகிராபி, பிசிக்ஸ், உள்ளிட்ட பிரிவுகளில் எம்.எஸ்சி, பிஇ, பிடெக் படித்திருக்க வேண்டும். அக்கவுண்ட் ஆபிசர் பணிக்கு மாஸ்டர் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சிஏ, ஐசிடபிள்யூஏ, எஸ்ஏஎஸ் படித்தால் கூடுதல் பலம்.
மேலும் சயின்டிஸ்ட் - சி பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மட்டும் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். மாதசம்பளமாக குறைந்தபட்சம் ரூ.67,700 முதல் ரூ.1.35 லட்சம் வரை சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவோர். விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 20ம் தேதிக்குள் ncpor.res.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications