ரெடியா? ரூ.56,500 வரை சம்பளம்..என்எப்எல் நிறுவனத்தில் அக்கவுண்ட் அசிஸ்டென்ட் பணி.. சூப்பர் வாய்ப்பு்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் தேசிய உர லிமிடெட் நிறுவனத்தில் அக்கவுண்ட் அசிஸ்டென்ட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.56,500 வரை வழங்கப்படும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தேசிய உர லிமிடெட் (National Fertilizers limited) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் என்பது உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது.

 National Fertilizers Limited recruitment for Accounts Assistant jobs

இந்த நிறுவனத்தின் அமோனியா-யூரியா பிளாண்டுகள் 5 உள்ளன. அதன்படி பஞ்சாப் மாநிலம் நங்கல், பதிண்டா, ஹரியானா மாநிலம் பாணிபட், மத்திய பிரதேச மாநிலம் குனா மாவட்டம் விஜைபூரில் 2 பிளாண்டுகள் உள்ளன. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள்: தேசிய உர லிமிடெட் நிறுவனத்தில் அக்கவுண்ட் அசிஸ்டென்ட் பணிக்கு 15 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள். தற்போதைய அறிவிப்பின் படி நங்கல் யூனிட்டில் ஒருவர், பதிண்டா யூனிட்டில் ஒருவர், மார்க்கெட்டிங் பிரிவில் 5 பேர், கார்ப்பரேட் அலுவலகத்தில் 5 பேர், விஜைபூர் யூனிட்டில் 3 பேர் என பணியமர்த்தப்படுவார்கள்.

வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்சம் என்றால் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 முதல் 15 வயது வரையும் தளர்வு வழங்கப்படும்.

கல்வி தகுதி - மாதசம்பளம்: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் பிகாம் படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.23 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் ரூ.56,500 வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் மாதம் 1ம் தேதிக்குள் https://careers.nfl.co.in/ இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி, துறை சார்ந்த ஊழியர்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது.

தேர்வு செய்யப்படுவது எப்படி: இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஓஎம்ஆர் அடிப்படையிலான தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ்நாட்டில் ஓஎம்ஆர் தேர்வு என்பது சென்னையில் வைத்து நடக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+