நீலகிரி அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. உடனே அப்ளை பண்ணுங்க
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகள் மற்றும் பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் 4, பட்டதாரி ஆசிரியர் 28, இடைநிலை ஆசிரியர் 28 காலிப்பணியிடங்கள் உள்ளன. தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிய விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று நீலகிரி மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் மற்றும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி முதுகலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக ஆசிரியர் நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
காலிப்பணியிடங்கள்: அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகள் மற்றும் பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் 4, பட்டதாரி ஆசிரியர் 28, இடைநிலை ஆசிரியர் 28 காலிப்பணியிடங்கள் உள்ளன.
சம்பளம் எவ்வளவு?: அதன்படி, முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.18,000, பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15,000, இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12,000 மாத தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணியிடங்களை இந்த கல்வியாண்டு இறுதி வரை அல்லது ஆசிரியர் தேர்வு வாரியம், பதவி உயர்வு மூலம் நிரந்தர பணியாளர்கள் நிரப்பிடும் வரை அல்லது கல்வியாண்டில் எது முன்னரோ அதுவரை ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றவர்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தேர்வு செய்யப்படும். பணியிடங்கள் தற்காலிகமானது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவர்கள், பள்ளி அமைந்து உள்ள பகுதி மற்றும் அதன் அருகில் வசிப்பவர்கள், பள்ளி உள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள், பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள், மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கல்வித்தகுதி: வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்ச்சி பெற்றவர்கள் (டெட் தாள்-1), முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டவர்களுக்கும், இல்லையெனில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: விண்ணப்பதாரர்களிடம் இருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஆதிதிராவிடர் நல பள்ளிகள் மற்றும் பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் 4, பட்டதாரி ஆசிரியர் 28, இடைநிலை ஆசிரியர் 28 காலிப்பணியிடங்கள் உள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications