சொந்த ஊரில் வேலை பார்க்க ஆசையா? 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள்! விண்ணப்ப அறிவிப்பு வெளியானது
சென்னை: வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, எப்போது வரை விண்ணப்பிக்கலாம், எப்படி தேர்வு நடைபெறும் என்பன உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
தமிழகம் முழுவதும் வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கோண்டது. கிராம உதவியாளர் பணி தேர்வுக்கான தகுதி வரைமுறைகள், நேர்முகத் தேர்வு வழி முறைகள் உள்ளிட்ட விவரங்களை அண்மையில் தமிழக அரசு வெளியிட்டது.

கிராம உதவியாளர் பணியிடங்கள்
கிராம உதவியாளர்கள் என்பது கிரமங்களில் விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலருக்கு கீழ் நியமிக்கப்படும் பணியிடமாகும். இந்த பணிக்கு நியமனம் செய்யப்படுபவர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்யப்படுவார்கள். அதாவது, மாதம் ரூ. ரூ.11,100 - ரூ.35,100 என்ற ஊதியத்தின் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். இந்த கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி, கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு நடைமுறைகள் தொடர்பான மாதிரி கால அட்டவணையும் வெளியாகியுள்ளது. இதன்படி, விண்ணப்பங்களை பெறும் கடைசி நாளாக 04.08.2025 அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி என்ன
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்ய கடைசி நாள்; 12.08.2025 ஆகும். தேர்வு எழுதுதல் (படித்தல்/ எழுதுதல் திறன்)- 2.09.2025 , நேர்காணல் நடைபெறும் தேதி: 17.09.2025, 18, 19, 22 மற்றும் 23.09.2025 ஆகிய தேதிகளில் நடைபெறும். தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடுதல் மற்றும் பணி நியமன ஆணை வழங்குதல் 25.09.2025 (வியாழக்கிழமை) ஆகும்.
கிராம உதவியாளர் பணிக்கு, தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் தேர்வில், தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதியிருக்க வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் முறையாக தேதிவாரியாக தனிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும், விண்ணப்பங்கள் பெறப்பட்டு சரிபார்க்கப்பட்டு ஒப்புகை சீட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எப்படி நடைபெறும்
விண்ணப்பதாரர்கள் பைக் ஓட்டுவதற்கு உரிமம் வைத்து இருந்தால் அதற்கு தேர்வு கிடையாது. மிதிவண்டி, பைக் ஓட்ட தெரிந்து இருந்தால் அதற்கு தேர்வு நடத்த வேண்டும். இதற்கு 10 மதிப்பெண் அளிக்கப்படும். தமிழ் வாசிக்கும் எழுதும் திறன் இருந்தால் அதற்கு 30 மதிப்பெண் அளிக்க வேண்டும். நேர்காணல் குழுவின் முன் வாசித்து, எழுதி காட்ட வேண்டும்.
விண்ணப்பிக்கும் கிராமத்தில் வசிப்பவராக இருந்தால், 35 மதிப்பெண் அளிக்க வேண்டும். தாலுகா எல்லைக்குள் வசிப்பவர் எனில் 30 மதிப்பெண் அளிக்க வேண்டும். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், பிற தனி வட்டாட்சியர் ஆகியோரை கொண்ட குழுவால் தேர்வு நடத்தப்படும்.












Click it and Unblock the Notifications