அனுபவம் வேண்டாம்.. மதுரை ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாளாகும்.
மதுரை கே புதூரில் நோவாஸ்ட்ரிட் ஐடி வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது க்யூஏ டிரெய்னி (QA Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு 2021-2024ம் ஆண்டுக்குள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணி அனுபவம் வேண்டாம். இருப்பினும் விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி Manual/Automation Testing பிரிவு பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மதுரையின் கே புதூரில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் வசிக்க வேண்டும். லேப்டாப்பில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதல் 6 மாதம் பயிற்சி வழங்கப்படும். மாதம் ரூ.8 ஆயிரம் Stipend முறையில் வழங்கப்படும். ஒரு ஆண்டு Bond உள்ளது. வாரத்தில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பணி இருக்கும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாளாகும். இன்று மதியம் 3 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இப்படி விண்ணப்பம் செய்வோர் இண்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி Written Test (Aptitude, Technical மற்றும் English), டெக்னிக்கல் ரவுண்ட் மற்றும் எச்ஆர் டிஸ்கஷன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். இண்டர்வியூ தேதி, நேரம் இ-மெயிலில் தெரிவிக்கப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here


Click it and Unblock the Notifications
