மாதம் 85 ஆயிரம் சம்பளம்.. பொதுத்துறை வங்கியில் உள்ளூர் அதிகாரி பணியிடம்! செம சான்ஸ்.. ரெடியா?
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் லோக்கல் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 110 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.48,480 - 85,920 வரை சம்பளமாக வழங்கப்படும். மேலும் விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பஞ்சாப் & சிந்து வங்கி. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கி 1,500 கிளைகளுடன் இயங்கி வருகிறது. எஸ்.பி.ஐ தவிர்த்து பிற வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி ஆட்சேர்ப்பு முகமை மூலமாக பெரும்பாலும் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.

இது தவிர சிறப்பு அதிகாரி உள்ளிட்ட சில பணியிடங்களை நேரடியாக வங்கிகள் நடத்துகின்றன. அந்த வகையில் தற்போது 110 லோக்கல் ஆஃபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: 110 லோக்கல் வங்கி அதிகாரி - அருணாசல பிரதேசம், அசாம், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பணியமர்த்தப்படுவார்கள்
கல்வி தகுதி & வயது வரம்பு: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் முடித்து இருந்தால் போதும். வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது பூர்த்தியானவர்களும் 30-வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அதாவது, 02.02.1995 க்கு முன்பாகவோ 01.02.2005 க்கு பிறகோ பிறந்தவராகவோ இருத்தல் கூடாது. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, எஸ்.சி/எஸ்.டி பிரிவை சேர்ந்தவர்கள் என்றால் 35 வயது வரை விண்ணப்பிக்காலம். ஒபிசி பிரிவினர் என்றால் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?: லோக்கல் பேங்க் ஆஃபிசர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.48,480 - 85,920 வரை சம்பளமாக வழங்கப்படும். எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் மட்டுமே இறுதி மெரிட் லிஸ்ட் தயாரிக்கப்படும். நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் தேர்வுகள் நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, நெல்லை ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.
தேர்வுக்கட்டணம்: தேர்வுக்கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி/ மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாக மட்டுமே கட்டணம் செலுத்த முடியும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை பார்த்துவிட்டு விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க 28.02.2025 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://punjabandsindbank.co.in/system/uploads/recruitment/2150_2025020715312629266.pdf
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications