"வீட்டில் இருந்தே வேலை".. ரூ.4 லட்சம் முதல் ரூ.34 லட்சம் வரை சம்பளம்! சூப்பர் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
சென்னை: ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.34 லட்சம் வரையிலான சம்பளத்தில் வீட்டில் இருந்தே பணி செய்வதற்கு ஐடி நிறுவனம் சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பணிக்கு பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
கொரோனாவுக்கு பிறகு பல ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகம் வரவழைத்து வேலை செய்ய பணித்துள்ளன. சில நிறுவனங்கள் மட்டுமே வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்கின்றன.

இப்படியான சூழலில் தான் ஐடி நிறுவனம் ஒன்று அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கான வாய்ப்பை வழங்கி உள்ளது. இதுபற்றிய முழு விபரம் வருமாறு:
இந்நிலையில் தான் Qulitim நிறுவனத்தில் இருந்து டேட்டா அனலிஸ்ட்ஸ் (Data Analysts) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்க Freshers மற்றும் Experience நபர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். அதேபோல் டேட்டா அனலிஸ்ட் பணியில் குறைந்தபட்சம் 0 முதல் 7 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் டேட்டா அனலிஸ் டெக்னிக்ஸ் தெரிந்திருக்க வேண்டும். எக்ஸல், SQl மற்றும் டேட்டா விசுவலைசேஷன் டூல்ஸ்களான பவர் பிஐ, Tableau நன்கு தெரிந்திருக்க வேண்டும். டேட்டா கிளீனிங் மற்றும் ப்ரீ புராசசிங் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். அதேபோல் அனலிட்டக்கல் ஸ்கில்ஸ் இருப்பதோடு, ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் திறமை என்பது இருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே பணி செய்யலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.34 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது. சம்பளம் என்பது பணி அனுபவம், தகுதியின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும்.
இந்த பணிக்கான அறிவிப்பு நேற்று வெளியாகி உள்ளது. அதில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி என்பது முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications