RRB Group D: இந்தியன் ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 10 ஆம் வகுப்பு தகுதி தான்
சென்னை: இந்தியன் ரயில்வேயில் குரூப் டியில் 22,195 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. 10 ஆம் வகுப்பு ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப சம்பளமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றே விண்ணப்பித்து விடுங்கள்.
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), லெவல் 1 (குரூப் D) பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பினை வெளியிட்டது. நாடு முழுவதும் மொத்தம் 22,195 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு யார் யார் விண்ணப்பிக்க முடியும், வயது வரம்பு என்ன உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.

பணியிடங்கள் விவரம், கல்வித் தகுதி:
நாடு முழுவதும் மொத்தம் 22,195 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு (Matriculation/SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஐடிஐ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். அதாவது தேசிய தொழிற்கல்வி கவுன்சில் (NCVT) அல்லது மாநில தொழிற்கல்வி கவுன்சில் (SCVT) அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ (ITI) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் (NAC) பெற்றவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
பணியிடங்களுக்கான வயது வரம்பைப் பொறுத்தவரை, 2026 ஜனவரி 1 நிலவரப்படி, விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 33 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். இருப்பினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
பட்டியலிடப்பட்ட சாதியினர்/பழங்குடியினர் (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 3 ஆண்டுகளும் வயதுத் தளர்வு உண்டு. மேலும், பொதுப் பிரிவு/EWS மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், SC/ST மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும், OBC மாற்றுத்திறனாளிகளுக்கு 13 ஆண்டுகளும் வயதுத் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
லெவல் 1 (குரூப் D) பணியிடங்களுக்கான அடிப்படை சம்பளம் மாதம் ₹18,000/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை எப்படி?
இந்த பணியிடங்களுக்கான தேர்வு முறை கணினி அடிப்படையிலான தேர்வு (CBT), உடற்தகுதித் தேர்வு (PET), சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification) மற்றும் மருத்துவப் பரிசோதனை (Medical Examination) ஆகிய நிலைகளைக் கொண்டிருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் முறையில் செலுத்தப்பட வேண்டும். பட்டியலிடப்பட்ட சாதியினர்/பழங்குடியினர் (SC/ST), பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC), மாற்றுத்திறனாளிகள் (PwBD) மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு ₹250/- கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை முழுமையாகத் திரும்பப் பெறப்படும். மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ₹500/- கட்டணம் வசூலிக்கப்படும், இதில் ₹400/- திரும்பப் பெறப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் RRB-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை (https://www.rrbchennai.gov.in/) அணுகி, அங்கே உள்ள ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்று விண்ணப்பித்து விடுங்கள்..
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முன், RRB Group D 2026 அறிவிப்பை முழுமையாகப் படித்து, தங்களுக்குரிய தகுதி நிலைமைகளை விண்ணப்பதாரர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications