ரயில்வே லோகோ பைலட் பணி.. விண்ணப்பதாரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஆர்ஆர்பி வெளியிட்ட ஸ்வீட் நியூஸ்
டெல்லி: தெற்கு ரயில்வே உள்பட ரயில்வேயின் அனைத்து மண்டலங்களையும் சேர்த்து மொத்தம் 5,696 உதவி லோகோ பைலட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியானது. தற்போது லோகோ பைலட்கள் பணியிடங்கள் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, பணியிடங்கள் எண்ணிக்கை 18,799 ஆக அதிகரிக்கப்படுவதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலமாக தேர்வு நடத்தி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாகவும் லட்சக்கணக்கான ஊழியர்களையும் கொண்டதாக ரயில்வே உள்ளது.

கைநிறைய சம்பளம், சலுகைகள், பணி பாதுகாப்பு போன்றவற்றால் ரயில்வே பணிகளில் சேர இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் உள்ளது. இதனால், ஆர்ஆர்பி தேர்வு அறிவிப்பினை வெளியிட்டதும் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த ஆண்டு துவக்கத்தில் ரயில்வேயில் உதவிலோகோ பைலட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது.
தெற்கு ரயில்வே உள்பட ரயில்வேயின் அனைத்து மண்டலங்களையும் சேர்த்து மொத்தம் 5,696 - உதவி லோகோ பைலட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியானது. தற்போது லோகோ பைலட்கள் பணியிடங்கள் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, பணியிடங்கள் எண்ணிக்கை 18,799 -ஆக அதிகரிக்கப்படுவதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே மண்டலங்களில் இருந்து கூடுதல் லோகோ பைலட்கள் தேவைப்படுவதாக கூறப்பட்டதையடுத்து, பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு தொடர்பாக விரைவில் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்றும், ஆர்ஆர்பி இணையதளத்தில் மண்டல வாரியாக உள்ள காலிப்பணியிடங்கள் தெளிவாக குறிப்பிடப்படும் எனவும் ரயிவே தெரிவித்துள்ளது.
ஏற்கனவே லோகோ பைலட் பணி நடைமுறைகளுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்கள் விருப்ப தேர்வை ரிவைஸ் செய்வதற்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும், இது பற்றிய முழுமையான விவரங்கள் விரைவில் ஆர்ஆர்பி இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதால் தேர்வர்கள் அவ்வப்போது செக் செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லோகோ பைலட் பணியிடங்ளுக்கு ஐந்து கட்ட தேர்வுகளுக்கு பிறகு தகுதியான விண்ணப்பதாரர்க்ள் தேர்வு செய்யப்படுவார்கள். கணிணி வழி தேர்வு (CBT ) இரண்டு கட்டங்களாக நடைபெறும். அதன்பிறகு CBAT எனப்படும் கணிணி வழி ஆப்டியூட் டெஸ்ட் நடைபெறும். அதன்பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு லோகோ பைலட் பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு கல்வி தகுதியுடன் ஐடிஐ, டிப்ளமோ, பிஇ / பி.டெக் ஆகிய படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / ஆட்டோ மொபைல் என்ஜினியரிங் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் டிப்ளமோ மற்றும் என்ஜினியரிங் முடித்து இருப்பது அவசியம். கல்வி தகுதி குறித்த விவரங்களை ஆர்ஆர்பி இணையளத்தில் செக் செய்து கொள்ளலாம்.
லோகோ பைலட் பணியிடங்களுக்கு கூடுதல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக வெளியான அறிவிப்பை லோகோ பைலட் பணியாளர் கூட்டமைப்பின் அமைப்பு செயலாளர் வி பாலச்சந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். உதவி லோகோ பைலட் பணியிடங்களை அதிகரிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் தெரிவித்து இருப்பது தற்போதைய லோகோ பைலட்களின் பணிசுமையை குறைப்பதாக அமையும்" என்றார்.
லோகோ பைலட்களின் பணி நேரத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக பணியாளர்கள் முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் ரயில்வேயில் 21 சதவிகித லோகோ பைலட் பணியிடங்களும் 8 சதவிகித உதவி லோகோ பைலட் பணியிடங்களும் காலியாக உள்ளதாக காங்கிரஸ் கட்சி அண்மையில் கூறியிருந்தது.
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications