எஸ்பிஐ வங்கியில் அதிகாரி ஆகணுமா? செம சான்ஸ்..1040 பணியிடங்கள்.. ஒரு நாள்தான் இருக்கு! அப்ளை பண்ணுங்க
சென்னை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் சிறப்பு அதிகாரி (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. மொத்தம் 1040 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள் ஆகும். எனவே விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வருகிறது. எஸ்.பி.ஐ வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் பணியாற்ற சிறப்பு அதிகாரி (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்..

பணியிடங்கள் விவரம்:
மத்திய ஆராய்ச்சி குழு (Central Research Team) - 02
மத்திய ஆராய்ச்சி குழு (சப்போர்ட்) - 02
திட்ட மேம்பாட்டு மேலாளர் (வணிகம்) - 02
திட்ட மேம்பாட்டு மேலாளர் (தொழில்நுட்பம்) - 1
ரிலேஷன்ஷிப் மேனேஜர் (பேக்லாக் போஸ்ட்) - 123
ரிலேஷன்ஷிப் மேனேஜர் ஆர்எம் ரெகுலர் போஸ்ட் - 150
VP Wealth Regular Post - 600 என்பன உள்பட 10 வகையான பதவிகளில் மொத்தம் 1040 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வி தகுதி: பணியின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். எம்.பி.ஏ/ எம்.சிஏ போன்ற உயர் படிப்புகளும் சில பணியிடங்களுக்கு கோரப்பட்டுள்ளன. போதிய பணி அனுபவமும் அவசியம். சில பணியிடங்களுக்கு சந்தை நிலவரம் குறித்த விவரங்களும் தெரிந்து இருப்பது அவசியம். கல்வி தகுதி குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் தேர்வு ஒருமுறை முழுமையாக படித்து தெரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்
வயது வரம்பு: ஆகஸ்ட் 1, 2024 ஆம் தேதிப்படி குறைந்த பட்சம் 23 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது 30, 45 என பணியின் தன்மைக்கேற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: தேர்வு முறையை பொறுத்தவரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதன்பிறகு மெரிட் லிஸ்டில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.. 5 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இதில் முதலாவது ஆண்டு தகுதி காண் காலமாகும்.
விண்ணப்ப கட்டணம்: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
நாளை கடைசி நாள்: விண்ணப்பிக்க நாளை 08.08.2024 கடைசி நாள் ஆகும். தேர்வு அக்டோபர் - நவம்பர் கால கட்டத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை இந்த இணையதளத்தில் https://recruitment.bank.sbi/crpd-sco-2024-25-09/apply தெரிந்து கொள்ளலாம்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications