Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரெடியா? மாதம் ரூ.95,910 வரை சம்பளம்.. இந்திய நாணய உற்பத்தி கழகத்தில் சூப்பர் பணி! அசத்தலான வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: மத்திய அரசின் நிறுவனமான இந்தியா பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்தி கழகத்தில் (Security Printing and Minding Corporation of India) மாதம் குறைந்தபட்சம் ரூ.18,780 முதல் அதிகபட்சமாக ரூ.95,910 வரையிலான சம்பளத்தில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

மத்திய பொருளாதார விவகாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்தி கழகம் செயல்பட்டு வருகிறது.

 SPMCIL recruitment 2023 for various post including Junior Technician and Supervisor

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இந்த கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

ஜூனியர் டெக்னீசியன்: இந்த பணிக்கு மொத்தம் 53 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஐடிஐயில் எலக்ட்ரோ பிளேட்டர், பவுண்டரிமேன், புர்னாஸ் ஆபரேட்டர், கெமிக்கல் பிளான்ட் ஆபரேட்டர், லேப் அசிஸ்டென்ட் (கெமிக்கல் பிளான்ட்), கோல்ட்ஸ்மித், ஜூவெல் ஸ்மித், மில்ரைட் மெயின்டெனன்ஸ் மெக்கானிக்கல், எலக்ட்ரிசியன், வெல்டர், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ராகனிக்ஸ் மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்டேசன் மெக்கானிக், பிளம்பரம் உள்ளிட்ட படிப்புகளில் சான்றிதழ் முடித்திருப்பவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18,780 முதல் ரூ.67,390 வரை சம்பளம் வழங்கப்படும்.

சூப்பர்வைசர்: இந்த பணிக்கு 7 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு மாஸ்டர் டிகிரியில் அல்லது ஆங்கிலம் முடித்தவர்கள், டிப்ளமோ என்றால் எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலிகம்யூனிகேசன், பிஇ, பிடெக், பிஎஸ்சி என்றால் மெட்டாலூர்சிகல் படிப்பை படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.27,600 முதல் ரூ.95,910 வரை சம்பளம் வழங்கப்படும்.

லேபாரட்டரி அசிஸ்டென்ட் குரூப் II: இந்த பணிக்கு மொத்தம் 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிஎஸ்சி பிரிவில் கெமிஸ்ட்ரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.21,540 முதல் ரூ.77,160 வரை சம்பளம் வழங்கப்படும்.

எங்க்ராவர் (மெட்டல் வொர்க்ஸ்): இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு இளங்கலை பிரிவில் பைன் ஆர்ட்ஸ் (மெட்டரல் வொர்க்ஸ்) டிகிரியை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.23,910 முதல் ரூ.85,570 வரை சம்பளம் வழங்கப்படும்.

செக்ரட்டரியல் அசிஸ்டென்ட்: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இந்த விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.23,910 முதல் ரூ.85,570 வரை சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இப்படியாக மொத்தம் 64 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு 18 முதல் 25 வயதுக்குள் இருப்பவர்களும், சூப்பர்வைசர் பணிக்கு 18 முதல் 30 வயதுக்குள் உள்ளவர்களும், பிற பணிகளுக்கு 18 வயது முதல் 28 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் igmhyderabad.spmcil.com இணையதளம் மூலம் அக்டோபர் 1ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.650 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி, முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.300 விண்ணப்ப கட்டணமாக இருக்கிறது. இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+