தமிழகத்தில் கொட்டி கிடக்கும் அரசு வேலைகள்.. உடனே விண்ணப்பிக்க தயாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அரசு பணிகளுக்கு இந்த வாரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான தகுதிகளும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துவிடுங்கள் அதற்கான விவரங்களை இப்போது பார்ப்போம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மொத்தம் 500 காலிபணியிடங்கள் Junior Assistant (Accounts) உள்ளன. இதற்கு கல்வித்குதி: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று பின்னர் வணிகவியல் பிரிவில் பி.காம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

tamil nadu government jobs in various departments, interested candidate apply

மாத ஊதியம்: ரூ. 19,500 - ரூ.62,000 வரை கிடைக்கும்.

எத்தனை வயது வரை விண்ணப்பிக்கலாம்: பொதுப்பிரிவினர் 01.07.2019 தேதியின்படி 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.மற்ற எஸ்டி, எம்பிசி, பிசி உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது: www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே (ஆன்லைனில்) விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணமாக பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.1000, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500, அனைத்து பிரிவைச் சேர்ந்த விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.500 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 09.03.2020, முழு விவரங்களை அறிய: மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்ன www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

மதுரை கருவூல வேலை

அடுத்தாக மதுரை மாவட்ட கருவூலத் துறையில் ஆறு அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது இதற்கு குறைந்த பட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 01.01.2020 தேதியின்படி 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வழக்கம் போல் குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. மாத சம்பளம்: மாதம் ரூ.15700 - ரூ.50000

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்: நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது: https://madurai.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் முகவரிக்கு 09.03.2020ம்தேதிக்கு சேரும் வகையில் அனுப்ப வேண்டும். முகவரி: சம்பளக் கணக்கு அலுவலர், சம்பளக் கணக்கு அலுவலகம், 224, தெற்கு வெளிவீதி, மதுரை - 625 001

மேலும் விவரங்களுக்கு: லிங்கில் சென்று காணலாம்.

திருவள்ளூர் கூட்டுறவு வங்கி வேலை

திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வேலை உள்ளது. மொத்தம் 36 காலி பணியிடங்கள் உள்ளது. பதவியின் பெயர் உதவியாளர். மாத
சம்பளம்: ரூ.14,000 - ரூ.47,500 + இதர படிகள்.

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி முடித்துருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர் ஆவர். அத்துடன் அவர்கள் தமிழ் மொழியை ஒரு பாடமாகப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருப்பதும் முக்கியம்.

வயது வரம்பு: 01.01.2020 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 01.01.2001 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.tvldrb.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 05.04.2020
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.03.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: லிங்கில் அறியலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+