சூப்பர் சான்ஸ்..சவுதியில் செவிலியர் வேலை பெற விருப்பமா? உடனே அப்ளை பண்ணுங்க! பிப்-18 தான் கடைசி தேதி
சென்னை: சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணிபுரிய பெண் செவிலியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ட்விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கூறியுள்ளது.
OMCL என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மூலம் வேலைநாடும் இளைஞர்களுக்கு அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் அமைப்பாக செயல்படுகிறது.

போலி முகவர்களை நம்பி வேலை தேடிசென்று யாரும் ஏமாறக்கூடாது என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்ல உதவுகிறது.
வெளிநாடுகளில் உள்ள சரியான பணிக்கு குறிப்பிட்ட நபர் தகுதி பெற்றால், அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமே செய்து தருகிறது. அதேபோல் தேவைப்பட்டால் வேலைக்கு தேவையான பயிற்சிகளையும் வழங்குகிறது. அந்த வகையில், சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணிபுரிய பெண் செவிலியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ட்விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் B.sc Nursing தேர்ச்சி பெற்று 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கான நேர்காணல் வருகிற 23.02.2025 முதல் 26.02.2025 வரை கொச்சியில் (KOCHI) நடைபெறவுள்ளது.
மேற்படி பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம். விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக் காலியிடங்கள் குறித்த விவரங்களை இந்நிறுவன வலைதளத்தில் www.omcmanpower.tn.gov.in கண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் ஊதியம் மற்றும் பணி பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (6379179200) (044-22505886/044-22502267)
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வலைதளத்தில் தவறாமல் பதிவுசெய்துகொண்டு தங்களின் சுய விவர விண்ணப்பப்படிவம். கல்விச்சான்றிதழ் பாஸ்போட் (Passport) அனுபவச்சான்றிதழ் ஆகியவற்றை [email protected] என்ற இந்நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு 18/02/2025 க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சிறப்பு தகுதி :- Saudi Professional Classification, HRD & Dataflow முடித்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொண்டு இந்நிறுவனத்தின் மூலம் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
படிப்பு மற்றும் பணிவிவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். இந்தப் பணிக்கு தேர்வு பெறும் பணியாளர்களிடமிருந்து சேவைக் கட்டணமாக ரூ.35,400/- மட்டும் வசூலிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்." என கூறப்பட்டுள்ளது.
-
IT Jobs:சோழிங்கநல்லூரில் ஐடி வேலை.. சென்னை HCL அலுவலகத்தில் நாளை – நாளை மறுநாள் இண்டர்வியூ! -
சென்ட்ரல் வங்கியில் வேலைவாய்ப்பு.. மாதம் 1.20 லட்சம் சம்பளம்.. பி.இ முடித்தவரக்ளுக்கு வாய்ப்பு -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல்












Click it and Unblock the Notifications