நோ எக்ஸாம்.. என்எல்சி பைனான்ஸ் பிரிவில் வேலை.. நெய்வேலி, சென்னை, தூத்துக்குடியில் வாய்ப்பு! ரெடியா?
சென்னை: மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறையின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நெய்வேலி, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட இடங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் ‛நவ்ரத்னா' நிறுவனத்தின் கீழ் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நிலக்கரி மற்றும் சுரங்க நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் ஒன்று தான் தமிழ்நாடு கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சியாகும்.
இந்நிலையில் தான் புதிய வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

என்எல்சி இந்தியா லிமிடெட் சார்பில் இன்டஸ்ட்டீரியல் டிரெய்னி (பைனான்ஸ்) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி நெய்வேலி யூனிட்டுக்கு 23 பேர், தூத்துக்குடி என்டிபிஎல்லுக்கு 6 பேர், சென்னை மண்டல அலுவலகம் , சென்னை மண்டல அலுவலம் (கமர்சியல்) ஆகியவற்றில் தலா 2 பேர் என உள்பட இந்தியா முழுவதும் மொத்தம் 56 பேர் தேர்வு செய்யபப்ட உள்ளனர்.
விண்ணப்பம் செய்வோர் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். பிடபிள்யூடி பிரிவினருக்கு 10 வயது வரையும் தளர்வு வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பத்தாரர்கள் Chartered Accountant அல்லது சிஎம்ஏ படிப்பை முடித்திருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பம் செய்வோர் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் மற்றும் சிஎம்ஏ படிப்புகளில் இன்டர்மிடியேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இவர்களுக்கு மாதம் ரூ.22 ஆயிரம் Stipend ஆக வழங்கப்படும். இது தற்காலிக பணியாகும். பணிக்காலம் என்பது 12 மாதங்கள்மட்டுமே. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.nlcindia.in இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய ஏப்ரல் 22ம் தேதி கடைசி நாளாகும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications