தமிழக போலீஸ், சிறை, தீயணைப்பு துறையில் குவிந்திருக்கும் வேலை.. 10 முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு!
சென்னை: தமிழ்நாடு காவல் துறை, சிறை, தீயணைப்புத்துறைகளில் காலியாக உள்ள 3,552 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு காவல் துறை, சிறை & சீர்த்திருத்தத்துறை மற்றும் தீயணைப்பு & மீட்புப்பணிகள் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
தமிழ்நாடு காவல் துறை, சிறை & சீர்த்திருத்ததுறை மற்றும் தீயணைப்பு & மீட்புப்பணிகள் துறைகளில் மொத்தம் 3,552 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. துறை வாரியாக பார்த்தால் காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் (மாவட்டம/மாநகர ஆயுதப்படை) பிரிவில் 1,526 ஆண்கள் 654 பெண்கள் என 2,180 இடம் இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல் படை) பிரிவல் ஆண்கள் மட்டும் 1,091 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. சிறை மற்றும் சீர்த்திருத்த துறையில் இரண்டாம் நிலை சிறைக்காவல் பணிக்கு 153 ஆண்கள், 8 பெண்கள் என மொத்தம் 161 பேரும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் தீயணைப்பாளர் பணிக்கு 120 பணியிடம்(ஆண்கள்) நிரப்பப்பட உள்ளது. இதன்படி மொத்தமுள்ள 3,552 பணியிடங்களில் 2,890 ஆண்கள் 662 பெண்களுக்கு வேலை வழங்கப்பட உள்ளது.

ஊதியம்- கல்வித்தகுதி என்ன?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் குறைந்தபடசம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும். 10ம் வகுப்புக்கு அதிகமான கல்வித்தகுதி பெற்றிருக்கும் நபர்களும் விண்ணப்பம் செய்யலாம். மாதஊதியமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை கிடைக்கும்.

வயது வரம்பு என்ன?
வயது வரம்பை பொறுத்தமட்டில் பொதுப்பிரிவினர்(OC) 18 வயது முதல் 26 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்(இஸ்லாமியர்-BC(M)), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(MBC) மற்றும் சீர்மரபினர் (DNC) 18 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் (SC), பழங்குடியினர் (ST), 3ம் பாலினத்தவர்கள், 18 வயது முதல் 31 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதரவற்ற விதவைகள் 18 வயது முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் இந்த தேர்வுக்க விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதிக்க பின்னர் ஓராண்டு காலத்துக்குள் ஓய்வு பெறவுள்ள ராணுவத்தினர் 47 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இவர்களின் வயது என்பது 01.07.2022ம் தேதியின் அடிப்படையில் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தமிழ் மொழி தகுதி தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு, உடல்தகுதி தேர்வு, உடல்திறன் போட்டி ஆகியவற்றின் அடிப்படையில் பெறும் மதிப்பெண், வாயிலாக சான்று சரிபார்ப்புக்கு பின் தேர்வு செய்யப்படுவர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும். www.tnusrb.tn.gov.in இணையதளம் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி கடைசி நாளாகும். தேர்வுக்கட்டணமாக ரூ.250 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணமும் ஆன்லைன் முறையில் தான் செலுத்தப்பட வேண்டும். இதற்கு விபணி தொடர்பான முழுமையான அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

சந்தேகங்களை தீர்ப்பது எப்படி?
மேலும் சந்தேகங்களை போன் செய்து தீர்த்து கொள்ளலாம். அதன்படி தொழில்நுட்பம் தொடர்பான சந்தேகங்களுக்கு 044-40016200, விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்களுக்கு 044- 28413658, 999008445, 9176243899, 9789035725, பணம் செலுத்துதல் தொடர்பான சந்தேகங்களுக்கு 044-28308976, 04428308948 எண்களை தொடர்பு கொள்ளலாம்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications