10ம் வகுப்பு போதும்! மாதஊதியம் ரூ.19,500 டூ ரூ71,900.. தலைமை செயலகத்தில் டெலிபோன் கனெக்ட்டர் வேலை
சென்னை: சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் காலியாக உள்ள டெலிபோன் கனெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,500 முதல் அதிகபட்சமாக ரூ71,900 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் சென்னை தலைமை செயலகத்தில் எழுத்து தேர்வு இன்றி ஒரு பணி நிரப்பப்பட உள்ளது. அதன் விபரம் வருமாறு:

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் தற்போது டெலிபோன் கனெக்ட்டர் பணியிடம் காலியாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அதோடு தொலைபேசி இணைப்பு தொடர்பான தொலைபேசி துறை அல்லது அது சார்ந்த துறைகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இருப்பினும் மேலும் விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பை பொறுத்தமட்டில் அரசு விதிகளின் படி தளர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் ஓபிசி பிரிவினருக்கு 34 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் 42 வயது வரையும் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பத்தாரர்களின் வயது என்பது 31.07.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு கட்டணம் எதுவும் இல்லை. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூலை மாதம் 17 ம் தேதிக்குள் ‛‛செயலாளர், சட்டமன்ற பேரவை செயலகம், தலைமை செயலகம், சென்னை 600 009'' என்ற முகவரிக்கு தாப்ல மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த தபாலில் புகைப்படத்துடன் கூடிய சுயவிவரங்கள், சுயசான்றொப்பமிட்ட தகுதிக்கான சான்றிதழ்களின் நகல்கள் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். கடைசி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications