சூப்பர்ல.. ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகனுமா? யுபிஎஸ்சி தேர்வுக்கு “ஃப்ரீ டிரெய்னிங்” - மாசம் 3 ஆயிரம் வேற தராங்க
சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளில் சேர்வதற்காக நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராவோர் தமிழ்நாடு அரசின் இலவச பயிற்சி மையத்தில் விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் இறையன்பு கேட்டுக்கொண்டு உள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில், மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும்.

அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, மாதிரி ஆளுமைத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இனவாரியாகவும், கிராமப்புரங்களில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த ஆர்வலர்கள் பயனடையும் வகையிலும் இப்பயிற்சி மையம் கடந்த 56 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
பசுமைச் சூழலில் அமைந்துள்ள இப்பயிற்சி மையத்தில் வகுப்பறைகள், தங்கும் இடவசதி, தரமான உணவு வழங்கும் விடுதி, கணினிமயமாக்கப்பட்ட நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைந்துள்ளன. சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி அளிப்பதுடன், ஆர்வலர்கள் தங்களை தேர்வுக்குத் தயார்ப்படுத்திக்கொள்ளும் வகையில் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.
கடந்த 28.05.2023-IGST DI நடைபெற்ற குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று தேர்வு எழுதிய தேர்வர்களில் 31 ஆர்வலர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளார்கள். இவர்களில் ஏழு பெண் ஆர்வலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு 05.12.2022 முதல் 28.05.2023 வரை உண்டி உறைவிடத்துடன் கூடிய அறைகள் வழங்கப்பட்டு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
தேர்வர்களுக்கு நடப்பாண்டில் 21 நேரடி தொடர்த் தேர்வுகள் மட்டுமல்லாது, இணையவழியில் 01.04.2023 முதல் 19.05.2023 வரை 40 தொடர்த்தேர்வுகள் (Online Test Series) நடத்தப்பட்டன. குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஆர்வலர்களுக்கு ஜுன்-2023 முதல் செப்டம்பர்-2023 வரை மூன்று மாதங்களுக்கு முதன்மைத் தேர்வு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற ஆர்வலர்கள் மட்டுமன்றி, குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த ஆர்வலர்களும் இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சி பெறக்கூடிய மூன்று மாத காலத்திற்கும் மாதந்தோறும் ஊக்கத் தொகையாக ரூ.3000/- (ரூபாய் மூன்றாயிரம் மட்டும்) வழங்கப்படும்.
அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் சேர விரும்பும் ஆர்வலர்கள் 15.06.2023 (வியாழக்கிழமை) காலை 10.00 மணி முதல் 17.06.2023 (சனிக்கிழமை) மாலை 06.00 மணி வரையில் www.civilservicecoaching.com என்ற இணையத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இட ஒதுக்கீட்டின்படி தெரிவு செய்யப்பட்ட ஆர்வலர்கள் விவரம் 18.06.2023 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 06.00 மணியளவில் இணையத்தில் வெளியிடப்பட்டு. 19.06.2023 மற்றும் 20.06.2023 ஆகிய இரு நாட்களில் சேர்க்கை நடைபெறுவதோடு 21.06.2023 முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.
இணையத்தில் பதிவு மேற்கொள்ளும் ஆர்வலர்கள். விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி, வருமானச் சான்றிதழ் விண்ணப்பித்தமைக்கான இணைய ரசீதை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். வருமானம் தொடர்பாக உரிய அலுவலர்கள் அளித்த வருமானச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழினையும் (Nativity Certificate) சேர்க்கையின் போது ஒப்படைக்க வேண்டும்.
அரசு விதிகளுக்குட்பட்டுப் பதிவு செய்தவர்களில். 225 ஆர்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கும் வசதிகளுடன் குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சியளிக்கப்பட உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.
-
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications