அடுத்த 5 வருஷத்தில் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் டாடா.. சந்திரசேகரன் ஸ்வீட் நியூஸ்
டெல்லி: ஒவ்வொரு மாதமும் சுமார் 10 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பை நோக்கி நகர்கின்றனர். அவர்களுக்காக 100 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று டாடா தலைவர் சந்திரசேகரன் கூறியுள்ளார். மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் 5-6 லட்சம் வேலை வாய்ப்புகளை டாடா உருவாக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
சர்வதேச அளவில் இளைஞர்கள் வளம் அதிகம் உடைய நாடுகளில் இந்தியா முதன்மையாக இருக்கிறது. இங்கு மொத்த மக்கள் தொகையில் 28% பேர் 15-29 வயது வரை உள்ளனர். இந்த எண்ணிக்கை மிகப்பெரியது. எனவே, உற்பத்தியில் சீனாவுக்கே நம்மால் சவால் விட முடியும். ஆனால், இங்குதான் வேலையின்மை மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து பேசிய டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், அடுத்த 5 ஆண்டுகளில் 5-6 லட்சம் வேலைகளை டாடா உருவாக்கும் என்று கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த 'இந்தியன் பவுன்டேசன் ஆஃப் குவாலிட் மேனேஜ்மென்ட்' (IFQM) கூட்டத்தில் அவர் இதை கூறியுள்ளார். அவர் பேசியதாவது, "இந்தியாவுக்கு இருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு மனித வளம்தான். ஒவ்வொரு மாதமும் சுமார் 10 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பை நோக்கி நகர்கின்றனர். அவர்களுக்காக 100 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. மத்திய அரசு அறிவித்துள்ள 'விக்சித் பாரத்' திட்டம் நல்ல பொருளாதார வளர்ச்சிக்கானது அல்ல.
இருப்பினும், இதனால் சமத்துவத்தையும், அனைவருக்குமான வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்று நம்புகிறேன். நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருளின் தரம், உலக சந்தையில் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.
பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் எனில், வேலையை உருவாக்க வேண்டும். இது இந்தியாவுக்கான தருணம். நம்மிடம் வேகம் இருக்கிறது.. நம்மால் உலக சந்தையில் உற்பத்தியை வழங்கும் முக்கிய வீரராக உருவாக முடியும்" என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இந்த கூட்டத்தில் மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்றிருந்தார். அவர் பேசும்போது, மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி, எய்ம்ஸ் மற்றும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், "அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது மிகப்பெரிய சவால். இதனை மத்திய அரசு திறம்பட எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக மேம்பட்டிருக்கிறது. இந்தியா தற்போது செல்போன்கள், தொலைதொடர்பு சாதனங்களின் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உற்பத்திக்கான அடித்தளத்தை கட்டமைக்க வேண்டியது அவசியம்" என்று கூறியுள்ளார்.
டாடா குழுமம் செமிகண்டக்டர்கள், மின்சார வாகனங்கள், பேட்டரிகள் மற்றும் தொடர்புடைய தொழில்களிலும் முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications