HR பணிக்கு ஆட்கள் தேவை.. TCS வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் சார்பில் HR பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய நாளை (ஏப்ரல் 3) கடைசி நாளாகும். அதன்பிறகு ஏப்ரல் 5ம் தேதி தேர்வு என்து நடைபெற உள்ளது.
டிசிஎஸ்.. ஐடி துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றாகும். டாடா குழுமத்தை சேர்ந்த இந்த நிறுவனத்துக்கு தமிழ்நாடு உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் இருக்கின்றன. டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போதைய அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது HR பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கல்லூரி படிப்பை 60 சதவீத மதிப்பெண்ணுடன் 2023, 2024ம் ஆண்டில் முடித்திருக்க வேண்டும். எம்பிஏ, மாஸ்டர்ஸ் ஆஃப் சோசியல் வொர்க், மாஸ்டர்ஸ் ஆஃப் லேபர் ஸ்டடீஸ், போஸ்ட் கிராசூவேட் டிப்ளமோ என்றால் எச்ஆர் மேனேஜ்மென்ட், போஸ்ட் கிராசூவேட் டிப்ளமோ என்றால் எச்ஆர் மேனேஜ்மென்ட் அல்லது அதற்கு நிகரான படிப்புகளை முடித்திருக்க வேண்டும்
அரியர்ஸ் என்பது இருக்க கூடாது. இந்த படிப்புகளை ஃபுல்டைம் முறையில் தான் படித்திருக்க வேண்டும்.
அதேபோல் எச்ஆர் பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் அவர்களின் அனுபவம் என்பது அதிகபட்சம் 2 ஆண்டுகளாக மட்டுமே இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோரின் வயது என்பது குறைந்தபட்சம் 18ல் இருந்து அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம், பணியிடம் குறித்த எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் முதலில் TCS NextStep Portal-லில் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு பணிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.
ஏற்கனவே இந்த போர்ட்டலில் பதிவு செய்திருந்தால் நேரடியாக ஐடி கேட்டகிரி என்பதை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். போர்ட்டலில் பதிவு செய்யாமல் இருந்தால் முதலில் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு ஐடி கேட்டகிரியை தேர்வு செய்து விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய நாளை (ஏப்ரல் 3) கடைசி நாளாகும். அதன்பிறகு ஏப்ரல் 5ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.
அதன்பிறகு ஒவ்வொருவருக்கும் பதிவு செய்யப்பட்ட இ-மெயில் மூலம் டெஸ்ட் தேதி, இடம் என்பது பற்றிய மெசேஜ் அனுப்பி வைக்கப்படும். தேர்வு என்பது ஆன்லைன் முறையில் நடக்காது. டிசிஎஸ் அலுவலகத்தில் தான் வைத்து நடக்கும். இதனால் விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட டிசிஎஸ் அலுவலகம் சென்று தேர்வு எழுத வேண்டியிருக்கும். தேர்வு 90 நிமிடங்கள் நடக்கும். எச்ஆர் சப்ஜெக்ட் தொடர்பாக தேர்வில் கேள்விகள் இருக்கும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் டிசிஎஸ் ஹெல்ப்டெஸ்க் டீமை [email protected] என்ற முகவரி அல்து 18002093111 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here


Click it and Unblock the Notifications
