TCS வேலைவாய்ப்பு.. ஐடி வேலை தான் வேண்டுமா? இந்த சான்ஸை மிஸ் பண்ணவே பண்ணாதீங்க! தேதி முடியப்போகுது
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று டிசிஎஸ். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.

டிசிஎஸ் எம்பிஏ ஆஃப் கேம்பஸ் என்ற பெயரில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. அதன் முழுவிபரம் வருமாறு:
பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எம்பிஏ (MBA), எம்எம்எஸ் (MMS), பிஜிடிபிஏ (PGDBA), பிஜிடிஎம் (PGDM) உள்ளிட்ட படிப்புகளில் மார்க்கெட்டிங், ஃபைனான்ஸ், ஆபரேஷன்ஸ், சப்ளை செயின் மேனேஜ்மென்ட், இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஜெனரல் மேனேஜ்மென்ட், பிசினஸ் அனலிடிக்ஸ், ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
2023ல் படிப்பை முடித்தவர்களும், இந்த ஆண்டு படிப்பை முடிப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு அரியர்ஸ் எதுவும் இருக்கக்கூடாது. அதோடு விண்ணப்பம் செய்வோர் 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அதோடு பணியில் முன்அனுபவம் கொண்டவர்கள் என்றால் 2 ஆண்டுக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு மே மாதம் 10ம் தேதிக்குள் டிசிஎஸ் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். TCS Next Step Portal-ல் சென்று முதலில் ரிஜிஸ்ட்டர் செய்ய வேண்டும். ஏற்கனவே ரிஜிஸ்டர் செய்திருந்தால் நேரடியாக IT Category என்பதை கிளிக் செய்து CT/DT ரெப்ரன்ஸ் நம்பரை பதிவிட்டு விண்ணப்பம் செய்யலாம். புதியவர்கள் என்றால் முதலில் TCS Next Step Portal-ல் முதலில் ரிஜிஸ்ட்டர் செய்து மேற்கூறிய முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இவ்வாறு விண்ணப்பம் செய்யும்போது Select Your Mode of Test என்பதில் In Center என்பதை கிளிக் செய்து விரும்பும் தேர்வு மையத்தை செலக்ட் செய்யவும். விண்ணப்பத்தாரர்களுக்கான தேர்வு என்பது ஜுன் மாதம் 17 ம் தேதி நடைபெறும். தேர்வு என்பது 3 வகைகளில் நடக்கும். Verbal Ability, Numerical Ability, Business Aptitude என்பதன் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும்.
இந்த பணி தொடர்பாக டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. யாராவது வேலை தொடர்பாக போன் செய்து பணம் செலுத்த கேட்டால் கொடுக்க வேண்டாம் எனவும் பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தற்போதைய அறிவிப்பில் மாத சம்பளம் மற்றும் பணியமர்த்தப்படும் இடங்கள் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் [email protected] என்ற இ-மெயில் அல்லது ஹெல்ப்லைன் எண்ணான 18002093111 என்பதை தொடர்பு கொள்ளலாம்.
பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications