எப்படியாவது படிச்சு மேல வந்திரு பரமா.. தெரு விளக்கில் ஜூமோட்டோ ஊழியர்.. நெகிழ வைத்த வீடியோ
சென்னை: எப்படியாவது படிச்சு மேல வந்திருப்பா என்று மனம் சிலரை பார்த்தாலே சொல்லும்.. கஷ்டப்பட்டு படித்து அதிகாரத்திற்கு வர விரும்பும் சாமானியர்கள் எல்லாருக்குமே இந்த ஏக்கம் இருக்கும். கல்வி மூலம் பெறும் செல்வம் மற்றும் அதிகாரமே நிலையானது என்பதால் அதற்காக நாம் போராட தயாராகவே இருக்க வேண்டும். பலருக்கும் ஊக்கம் அளிப்பதாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
கல்வியா, செல்வமா, வீரமா என்று அந்த காலத்தில் பெரிய விவாதமே நடந்து இருக்கும். கல்வி ஒன்று மட்டும் கற்றுக்கொண்டால்,, செல்வமும், வீரமும் ஒருவருக்கு தேடி வந்துவிடும் என்ற நிலையே இருக்கிறது. இன்றைக்கு படித்த பலர் உயர்ந்த பதவிகளில் அமருவதற்கு அவர்களின் கல்வி ஒன்று தான் காரணம் ஆகும்.

12ம் வகுப்பு படித்த போது மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றவர். பார்ட் டைம்மில் புரோட்டோ கடையில் வேலை செய்து படித்தார். இன்று அவர் ஆந்திராவில் கலெக்டராக இருக்கிறார். கடந்த 2009ம் ஆண்டு மதுரையைச் சேர்ந்த வீரபாண்டியன் ஐஏஏஸ், பத்தாம் வகுப்பு வரை மதுரை மாநகராட்சி பள்ளியில் படித்தார். பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். சட்டக் கல்லூரியில் படித்து கொண்டே அண்ணா நகரில் ஓரு தனியார் பயிற்சி பள்ளியில் படித்தார்.

வீரபாண்டியனின் அப்பா கணேசன் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். அம்மா பெருமாளக்காள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் வறுமையான குடும்ப சூழல், மாநகராட்சி பள்ளியில் படிப்பு, வறுமை காரணமாக மாலை 4 மணி முதல் 11 மணி வரை புரோட்டா கடையில் வேலை செய்த வீரபாண்டியன் கடந்த 2009ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வென்று மாவட்ட ஆட்சியராக மாறினார். ஆந்திராவில் தற்போது கலெக்டராக இருக்கிறார். இவரை போல் பலரை உதாரணமாக காட்ட முடியும்.
யாரும் திருட முடியாத சொத்து கல்வி... pic.twitter.com/6s2D1p09ur
— velmurugan (@velmurugantheni) April 25, 2024
12ம் வகுப்பு பெயில் ஆன வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஐபிஎஸ் அதிகாரியாகி உள்ளார். அதுபற்றி அண்மையில் படம் கூட வந்திருக்கும் . ஏழைகுடும்பத்தில் பிறந்து படிக்கும் போதே பெற்றோரின் கஷ்டத்தில் பங்கெடுத்து தடைகளை தகர்த்து வெற்றி பெற்றுள்ளார்கள் பலர். எளிய மக்களின் பிள்ளைகள் விடாமுயற்சியால் எதையும் சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளனர்.தமிழ்நாட்டில், கேரளாவில், ஆந்திராவில், பீகாரில், உத்தரப்பிரதேசத்தில் என பல மாநிலங்களில் உள்ள ஐஏஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அரசு பள்ளியில் படித்து வறுமையில் பார்ட் டைம் வேலைக்கு சென்று படித்தவர்கள் தான்.
தெருவிளக்கில் அமர்ந்து ஜூமோட்டோ ஊழியர் ஒருவர் படித்துக் கொண்டிருந்த வீடியோ ஒன்று நேற்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த பலர் எப்படியாவது படிச்சு மேல வந்திரு பரமா என்று உற்சாகம் ஊட்டி வருகிறார்கள். வறுமையில் கஷ்டப்பட்டவர்கள், படித்து முன்னேறி அதிகாரத்திற்கு வரும் போது, சமூகத்தில் பெரிய மாற்றம் வரும் என்பது உறுதி.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications