கைநிறைய சம்பளம்.. டைடல் பார்க்கில் சூப்பர் வேலை.. சென்னை, தஞ்சை, தூத்துக்குடி, சேலம், வேலூரிலேயே பணி
சென்னை: சென்னை, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர், சேலம் டைடல் பார்க்கில் காலியாக உள்ள மேனேஜர் மற்றும் அசிஸ்டென்ட் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை தரமணியில் ராஜீவ் காந்தி சாலையில் டைடல் பார்க் செயல்பட்டு வருகிறது. சென்னையில் ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கவும் இது தொடங்கப்பட்டது.

தற்போது மாநிலத்தின் பல்வேறு இடங்களில் புதிதாக டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது டைடல் பார்க்கில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
சென்னை டைடல் பார்க்கில் மேனேஜர் (பைனான்ஸ் அன்ட் அக்கவுண்ட்) பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர் சென்னையில் பணியமர்த்தப்பட உள்ளார். மாதசம்பளமாக ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிகாம்-சார்ட்டர்ட் அக்கவுண்ட் முடித்திருக்க வேண்டும். 5 முதல் 7 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதேபோல் டைடல் பார்க்கில் தற்போது அசிஸ்டென்ட் என்ஜினீயர் (சிவில்) பணிக்கு 4 பேர் தே்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர். ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. பிஇ பிரிவில் சிவில் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். அரசு அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களில் 8 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோருக்கு கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். அதோடு விண்ணப்பத்தாரர்கள் 30 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 30.09.2023ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் அக்டோபர் 13ம் தேதிக்குள் [email protected] இ-மெயிலில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும்.
அசிஸ்டென்ட் என்ஜினீயர் பணி குறித்த கூடுதல் தகவல்கள் அறிய Click Here
மேனேஜர் பணி குறித்த கூடுதல் தகவல்கள் அறிய Click Here


Click it and Unblock the Notifications
