தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு.. வெளியானது தரவரிசை பட்டியல்.. எப்படி பார்ப்பது?
சென்னை: தமிழகத்தில் 2025-26 கல்வி ஆண்டின் இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பம் செய்த மாணவ-மாணவிகளுக்கு ஏற்கனவே ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. இதையடுத்து தரவரிசை பட்டியலை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் வெளியிட்டார். அதேபோல் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலை எப்படி பார்க்கலாம்? என்பது பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ஏராளமான இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்று சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கல்லூரிகளில் கவுன்சிலிங் முறையில் ஒவ்வொரு ஆண்டும் பிஇ மற்றும் பிடெக் படிப்புக்கு மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டு வருகின்றன.
இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 2 லட்சம் வரை உள்ளன. இந்நிலையில் தான் 2025-26ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 5ந்தேதி தொடங்கியது. மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கு 10 இலக்க எண்கள் கொண்ட ரேண்டம் எண் கடந்த 11-ம் தேதி ஆன்லைன் வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பிறகு பொறியியல் சேர்க்கை சேவை மையங்களில் மாணவர்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்கும் பணி கடந்த 10ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடந்தது.
இந்த பணி முடிவடைந்தை தொடர்ந்து விண்ணப்பம் செய்த மாணவ-மாணவிகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். இந்த தரவரிசை எண்ணை பொறுத்து மாணவ-மாணவிகள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட உள்ளனர்.
மாணவ -மாணவர்கள் tneaonline.org என்ற இணையதளத்தில் சென்று தரவரிசை பட்டியலை பார்த்து கொள்ளலாம். மேலும் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 14 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரையும், சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 7 ஆம் தேதியும் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவி செழியன் கூறுகையில், ‛‛இன்ஜினியரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தர வரிசைப் பட்டியலில் 145 பேர் 200க்கு 200 கட் ஆப் எடுத்துள்ளனர். பொதுப்பிரிவில் காஞ்சிபரம் சாகஸ்ராமுதலிடம், நாமக்கல் மாணவி கார்த்திகா 2ம் இடம், அரியலூர் அம்லான் ஆண்டோ 3வது இடம் பிடித்தனர்.
அரசு பள்ளிகளில் பயின்ற சிறப்பு இடஒதுக்கீடு பிரிவினருக்கான (மாற்றுத்திறனாளி, முன்னாள் படை வீரர், விளையாட்டு வீரர்) கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி முதல் 8 ம் தேதி வரை நடைபெறும். தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 14ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைபெறும். துணை கலந்தாய்வு ஜூலை 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும்.
ஏஸ்சிஏ காலியிடம் எஸ்சி வகுப்பிற்கான கலந்தாய்வு ஜுலை 25 முதல் 26ம் தேதி வரை நடைபெறும். 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் கடலூரை சேர்ந்த தாரணி என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 51,004 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்'' என்றார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications