மாதஊதியம் ரூ18,500 டூ ரூ.58,600.. திருத்தணி கோவிலில் அரசு பணி.. அறநிலையத்துறையின் அசத்தல் அறிவிப்பு
திருவாரூர்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவாரூரில் உள்ள திருத்தணி முருகன் கோவிலில் எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி கோவில் மற்றும் அதன் உப கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

மொத்தம் 4 பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அது எந்தெந்த பிரிவுகள், விண்ணப்பம் செய்ய என்ன தகுதி வேண்டும்? என்பது பற்றிய விபரம் வருமாறு:
அதன்படி திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் ஓதுவார் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் தேவாரப்பாடசாலையில் தொடர்புடைய துறையில் 3 ஆண்டு படிப்பு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
அதேபோல் பரிச்சாரகர் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் கோவிலில் நடைபெறும் பூஜை முறைகள், நைவேத்தியம் தயாரிக்க வேண்டும். மேலும் வேதபாராயணம் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் 3 ஆண்டு படிப்பை முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அர்ச்சகர் பணிக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஆகமப்பள்ளி, வேதபாடசாலையில் ஓராண்டு படிப்பை முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தேர்வாகும் நபர்கள் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், சந்தானவேணுகோபாலபுரம், கரிம்பேடு நாதாதீஸ்வரசாமி கோவில், ஆற்காடு குப்பம் சோளீஸ்வரசாமி கோவில்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
ஓதுவார் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரையும், பரிச்சாரகர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளது. தேவபாராயணம் பணிக்கு ரூ.15,700 முதல் ரூ.50 ஆயிரம் வரையும், அர்ச்சகர் பணிக்கு மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://hrce.tn.gov.in மற்றும் htttps://tiruttanimurugan.hrce.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கி பூர்த்தி செய்து தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்களை ‛‛இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், திருத்தணிகை, திருவள்ளூர் மாவட்டம், அஞ்சல் முகவரி 631 209'' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை தபாலில் அனுப்பும்போது அதன்மீது உரிய பதவியின் பெயரை எழுதி ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். அதன்பிறகு பெறும் விண்ணப்பங்கள் நிராகரிப்பு செய்யப்படும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here
-
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications