ஆல் ரெடி.. குரூப் 1 முதன்மை தேர்வு இன்று தொடக்கம்! 95 அரசுப் பணிகளுக்கு போட்டிபோடும் 2,113 போ்
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் தேர்வுகளின் முதன்மையானதாக கருதப்படும் குரூப் 1 முதன்மை தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.
தமிழ்நாடு அரசு பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), வணிக வரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் உயர் பதவிகளுக்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்ய குரூப் 1 தேர்வுகள் மூலம் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி குரூப் 1 தேர்வுக்கான வெளியிடப்பட்டது. முதல்நிலைத் தோ்வு கடந்த ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்றது.
பிரதானத் தோ்வு ஆகஸ்டு 10 ஆம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்டு 13 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த குரூப் 1 தோ்வை 2,113 போ் எழுத உள்ளனா். இவர்களில் 1,333 போ் ஆண்கள், 780 பெண்கள். சென்னையில் மட்டும் 22 மையங்கள் இதற்காக அமைக்கப்பட்டு உள்ளது,." என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை டிஎன்பிஎஸ்சி இணையதளமான https://www.tnpsc.gov.in/ இல் பதிவிறக்கம் செய்யலாம்.












Click it and Unblock the Notifications