இன்று குரூப் 2 தேர்வு முடிந்தவுடன்.. டிஎன்பிஎஸ்சி சொன்ன குட்நியூஸ்.. 6 நாட்களில் நடக்கும் அதிசயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இன்று தமிழ்நாடு முழுக்க நடந்தது. இந்த நிலையில் இந்த தேர்வுக்கான விடைக் குறிப்பு இன்னும் 6 வேலை நாட்களில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II.இல் (தொகுதி-II மற்றும் தொகுதி-IIA பணிகள்) உள்ளடங்கிய பதவிகளுக்கான பொதுவான முதல்நிலைத் தேர்வு (கொள்குறிவகை) இன்று நடந்தது.

tnpsc jobs


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 08:2024, நாள் 20.082024-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II இல் (தொகுதி II மற்றும் தொகுதி IIA பணிகள்) உள்ளடங்கிய பதவிகளுக்கான பொதுவான முதல்நிலைத் தேர்வு (கொள்குறிவகை) 14092024 அன்று முற்பகல் நடந்தது.

தேர்வர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் (Hall Ticket) தேர்வு நடைபெறும் இடத்திற்கு வந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தேர்வர் தங்களுடைய ஆதார் அட்டை / கடைடச்சிட்டு (PASSPORT) ஓட்டுநர் உரிமம் நிரந்தர கணக்கு எண் அட்டை (PANCARD)/ வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒளிநகலை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டனர்.. .

தேர்வர்கள் கருமைநிற மை கொண்ட பந்துமுனைப் பேனாவை (Black ink Ball Point Pen) மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். மின்னணு சாதனங்களான அலைபேசி (Mobile Phone) மற்றும் புத்தகங்கள், குறிப்பேடுகள், கைப்பைகள், மற்ற அனுமதிக்கப்படாத பொருட்கள் போன்றவற்றுடன் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

குருப் 2, 2ஏ பணிகளில் அடங்கிய 2,327 காலிப் பணியிடங்களுக்கான இந்த விண்ணப்பங்களை செய்து உள்ளது. இந்த போட்டித் தேர்விற்கு 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பம் அனுப்பி உள்ளனர். . குருப் 2 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு இதனால் மிக கடுமையானதாக அமைந்துள்ளது. போட்டி உச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.. இதனால் சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு பணியிடத்திற்கு 340 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்த நிலையில்தான் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இன்று தமிழ்நாடு முழுக்க நடந்தது. இந்த நிலையில் இந்த தேர்வுக்கான விடைக் குறிப்பு இன்னும் 6 வேலை நாட்களில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

பதவிகள் என்னென்ன?: இந்த தேர்வு மூலம் கிடைக்கும் பதவிகள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.

ஜூனியர் வேலைவாய்ப்பு அதிகாரி (மாற்றுத் திறனாளிகள் அல்லாதவர்கள்)
சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் திணைக்களத்தில் நன்னடத்தை அதிகாரி
தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்
துணைப் பதிவாளர், பதிவுத் துறையில் தரம்-II
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சியில் (வேலைவாய்ப்பு பிரிவு) இளைய வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத் திறனாளிகள்)
விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளர்
காவல் ஆணையர் அலுவலகத்தின் புலனாய்வுப் பிரிவில் சிறப்புப் பிரிவு உதவியாளர்
குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புப் பிரிவில் சிறப்புக் கிளை உதவியாளர் (மாநில உளவுப் பிரிவு)

இதில் விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளர், துணைப் பதிவாளர், பதிவுத் துறையில் தரம்-II, குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புப் பிரிவில் சிறப்புக் கிளை உதவியாளர் (மாநில உளவுப் பிரிவு), காவல் ஆணையர் அலுவலகத்தின் புலனாய்வுப் பிரிவில் சிறப்புப் பிரிவு உதவியாளர் ஆகிய பதவிகள் நல்ல பவர் நிறைந்த பதவிகள் ஆகும்.

இவற்றில் சிலவற்றிற்கு அரசின் கார் கிடைக்கும். அதேபோல் சில பதவிகளுக்கு 40 - 60 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். டிஎன்பிஎஸ்சி அறிவித்த குரூப்-2 பதவிகளில் 116 இடங்களுக்கும், குரூப்-2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 413 இடங்களுக்கும் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் முதல்நிலைத் தேர்வை எழுதினார்கள். அதில் வெற்றி பெற்ற 57 ஆயிரத்து 641 பேர் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு எழுத அழைக்கப்பட்டார்கள். அவர்களில் 51 ஆயிரத்து 987 பேர் முதன்மைத் தேர்வை கடந்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 25-ந் தேதி எழுதி இருந்தார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+