கட் ஆஃப் குறையுது.. காலிப்பணியிடங்கள் 10 ஆயிரமாக உயருது? குரூப் 4 எழுதியவர்களுக்கு அடிக்குது யோகம்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கட் ஆப் குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு பணிகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குரூப் 4 பணியிடங்கள் 10,000 என்ற வகையில் மேலும் உயர்த்தப்படலாம் என்றும், இதனால் கட் ஆப் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் தமிழக அரசு துறைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை உரிய தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது. ஆண்டு தோறும் குறிப்பிட்ட இடைவெளியில் கால அட்டவணை வெளியிட்டு குரூப் 1 முதல் குரூப் 4 வரை பல்வேறு நிலைகளில் உள்ள அரசு பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது குரூப் 4 தேர்வுதான். ஏனெனில் 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட இந்த குரூப் 4 தேர்வில் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த குரூப் 4 தேர்வுக்கு தான் அதிகளவிலான விண்ணப்பங்கள் வருகிறது. எப்போது குரூப் 4 அறிவிப்பு வெளியாகும் என பல லட்சம் இளைஞர்கள் இந்த எதிர்பார்த்து இருந்து வருகின்றனர்.
நபார்டு வங்கியில் வேலை.. மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளம்.. 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி.. அருமையான வாய்ப்பு
அந்த வகையில் தான் சுமார் 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. ஜனவரி 30 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் சுமார் 20 லட்சம் பேர் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதற்கான தேர்வானது கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. 7,247 மையங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் 15.8 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.
இந்த மாதத்தில் குரூப் 4 ரிசல்ட் வெளியிடப்படும் என்று கூறப்பட்ட நிலையில், குரூப் 4 காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 10,000 ஆக அதிகரிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாத துவக்கத்தில் முதலில் அறிவிக்கப்பட்ட 6244 பணியிடங்கள் போக கூடுதலாக 480 பணியிடங்கள் அதிகரிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. இதனால் மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 6,724 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இந்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 10,000 ஆக அதிகரிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்வேயில் டெக்னீசியன் பணி.. விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு.. மிஸ் பண்ணவங்க அப்ளை பண்ணுங்க
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறியதாவது:- "தமிழகத்தில் அரசு துறைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக குரூப் 4 தேர்வு காலிப்பணியிட எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. சுமார் 10,000 காலிப்பணியிடங்கள் என இருக்க வாய்ப்பு உள்ளது. எத்தனை இடங்கள் அதிகரிக்கப்படும் என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் அதிகரிக்கப்படும்" இவ்வாறு அவர்கள் கூறினர்.
டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளின் இந்த அறிவிப்பு குரூப் 4 தேர்வு எழுதிய தேர்வர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் கட் ஆப் மார்க்கும் குறையும். வரும் அக்டோபர் 2 வது வாரத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. தற்போது குரூப் 4 பணியிடங்கள் 6,724 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications