ரயில்வேயில் டெக்னீசியன் பணி.. விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு.. மிஸ் பண்ணவங்க அப்ளை பண்ணுங்க
சென்னை: ரயில்வேயில் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கும் விதமாக வரும் அக்டோபர் 2 ம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசத்தை ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த கால கட்டத்தில் புதிதாக விண்ணப்பம் பதிவு செய்து கொள்ளலாம். 14,298 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியிருந்தது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக இந்திய ரயில்வே உள்ளது. தனி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே துறையில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ரயில்வே துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் ரயில்வே ஆர் சேர்ப்பு வாரியம் (ஆர்ஆர்பி) மூலமாக அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக ரயில்வே தேர்வு வாரியம் ரயில்வேயில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? மொத்தம் எத்தனை பணியிடங்கள் உள்ளன? என்பது குறித்து விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
டெக்னீஷியன் கிரேடு I சிக்னல் - 1,092 பணியிடங்கள்
டெக்னீஷியன் கிரேடு III - 8,052 பணியிடங்கள்,
டெக்னீஷியன் கிரேடு III- 5,154 பணியிடங்கள் என மொத்தம் 14,298 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித்தகுதி: கல்வித்தகுதியானது பணியிடங்களின் தன்மைக்கேற்ப மாறுபடும். ஐடிஐ, டிப்ளமோ, பிஇ, பிஎஸ்சி படித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். உதாரணமாக டெக்னீஷியன் கிரேடு I சிக்ன பணிக்கு பிஎஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிமனையில் டீசல் மெக்கானிக் பணிகளுக்கு 10 ஆம் வகுப்புடன் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி குறித்த முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பில் படித்து தெரிந்துகொள்ளலாம்.
வயது வரம்பு: 01.07.2024- நிலவரப்படி டெக்னீசியன் கிரேடு I பணிக்கு 18 வயது முதல் 36 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். டெக்னீசியன் கிரேட் - III - பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 33 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது உச்சவரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?: டெக்னீசியன் கிரேட் I பணிக்கு ரூ. 29,200 சம்பளமும், டெக்னீசியன் கிரேட் III பணிக்கு ரூ.19,900 சம்பளம் வழங்கப்படும். இந்த அடிப்படைச் சம்பத்துடன் இதரச் சலுகைகளும் உண்டு.
டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கும் விதமாக வரும் அக்டோபர் 2 ம் தேதி முதல் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசத்தை ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் புதிதாக விண்ணப்பம் பதிவு செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் ஏற்கனவே விண்ணப்பம் செய்தவர்கள் தங்கள் விருப்ப தேர்வை மாற்ற வேண்டும் என்றாலும் விண்ணப்பத்தை எடிட் செய்து மாற்றிக் கொள்ள முடியும்.
அக்டோபர் 17 முதல் 21 ஆம் தேதி வரை விண்ணப்பதார்கள் தங்கள் விண்ணப்பங்களை எடிட் செய்து கொள்ளலாம். இதற்கு கட்டணமாக தனியாக ரூபாய் 250 செலுத்த வேண்டும். இது குறித்த முழு விபரங்களை ரயில்வே தேர்வு வாரிய இணையதளத்தில் முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.rrbchennai.gov.in/
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications