நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன! எப்படி தெரிந்துக்கொள்வது? விவரம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வினாத்தாள் கசிவு போன்ற பிரச்சனைகளால் கடந்த மே மாதம் நடைபெற இருந்த நீட் (NEET UG) தேர்வு இடையில் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்கையில், கடந்த ஜூன்.21 அன்று தேர்வுகள் நடைபெற்றன. தற்போது நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

neet.nta.nic.in என்கிற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று நீட் தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம். மாணவர்களின் மதிப்பெண் அட்டையில் அவர்களின் மொத்த மதிப்பெண், அகில இந்திய தரவரிசை, வகுப்பு வாரியான ரேங்க் மற்றும் தகுதி நிலை இடம்பெற்றிருக்கும்.

NEET UG 2026 Results Declared

ரிசல்ட்டை எப்படி பார்ப்பது?

தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணைய பக்கமான neet.nta.nic.in -க்கு செல்லவும். அங்கு முகப்பு பக்கத்தில் உள்ள Re-NEET 2026 Result என்கிற லிங்கை கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் அப்ளிகேஷன் நம்பர் மற்றும் பிறந்த தேதி அல்லது பாஸ்வேர்டை என்ட்டர் செய்யவும். கடைசியாக செக்யூரிட்டி பின் போட்டு submit கொடுக்கவும். இப்போது உங்கள் மதிப்பெண் அட்டை ஸ்கிரீனில் தோன்றும்.

தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் விரைவில் தொடங்க இருக்கும் மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவ கல்லூரிகளில் சேர இந்த மதிப்பெண்கள் அடிப்படையாக இருக்கும்.

தேர்வு முடிவுகள்

இந்த தேர்வு முடிவுகளில் 19 தேர்வர்கள் 700க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர். 1492 மாணவர்கள் 650க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர். பஞ்சாப்பின் ஆர்யன் குப்தா மற்றும் ஹரியானாவின் பன்ஜஷுல் பன்சால் ஆகியோர் 720க்கு 715 மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர்.

விடைக்குறிப்புகளை (answer keys) எவ்வாறு சரிபார்ப்பது?

NEET UG 2026 விடைக்குறிப்புகளைப் பெற பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  • neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி இணையதளத்தில் உள்நுழையவும்.
  • முகப்புப் பக்கத்தில் உள்ள "NEET UG 2026 answer key" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • இறுதி விடைக்குறிப்பைக் காட்டும் புதிய திரை ஒன்று திறக்கும்.
  • எதிர்காலத் தேவைக்காக அதைப் பதிவிறக்கம் செய்து சேமித்துக்கொள்ளவும்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+