டிஎன்பிஎஸ்சி மேஜர் குட்நியூஸ்.. 2024ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை இதுதான.. இவ்வளவு பணியிடங்களா?
சென்னை: டிஎன்பிஎஸ்சி 2024ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது. இதில் குரூப் 1-65 பணியிடங்கள், குரூப்2/2A-1294 பணியிடங்கள், வனத்துறை(Forest Guard&Forest Watcher)-1264 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குருப் 4 தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் குறித்தும் முக்கிய தகவல்கள் அட்டவணையில் உள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன போட்டித்தேர்வுகள் நடத்தப்படும்? காலியிடங்கள் எவ்வளவு, தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்? எழுத்துத் தேர்வு எப்போது நடத்தப்படும்? தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் ஆகிய விவரங்களை உள்ளடக்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டும்தோறும் வெளியிடும்.

இந்த கால அட்டவணையை பார்த்து தான், அரசு பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு தயாராக பெரிதும் உதவிகரமாக இருக்கிறது. இந்நிலையில், 2024-ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை டிச.15-ல் வெளியாகும் என தகவல் வெளியானது. இதனால், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், டிசம்பர் 15 அறிவிப்பும் வெளியாகவில்லை.. இதனால் தேர்வர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி : டிஎன்பிஎஸ்சி 2024ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது.
இதில் குரூப் 4 தேர்வு காலியிடங்கங்ள விவரம் வரும் ஜனவரியில் அறிவிக்கப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறை(Forest Guard&Forest Watcher)-1264 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், இதற்கான தேர்வு ஜூன் மாதம் நடத்தப்படும் என்றும், குரூப் 1-65 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை மாதம் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் குரூப்2/2A-1294 பணியிடங்கள், நிரப்பப்படும் என்றும், இதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
118 வனத்துறை அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், இதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. என்ஜினியர், அறிவியல், நீதித்துறை, நிதித்துறை, என பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் மே மாதம் முதல் செப்டம்பர் வரை அறிவிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. முழு பட்டியலை செய்தியுடன் படமாக இணைக்கப்பட்டுள்ளது பாருங்கள்.

-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications