ரூ.37,700 டூ ரூ.1.38 லட்சம் வரை ஊதியம்! அறநிலையத்துறையில் சூப்பர் வேலை.. TNPSC-யின் மேஜர் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையில் காலியாக உள்ள செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் மாதம் ரூ.37,700 முதல் ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 500 வரை சம்பளத்தில் வேலையை பெறலாம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் பல்வேறு அரசு பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

டிஎன்பிஎஸ்சி குரூப் 7-ஏ பிரிவில் இந்து அறநிலையத்துறையில் காலியாக உள்ள செயல் அலுவலர் , நிலை -1 (Grade-1) பதவிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
காலியிடங்கள்: தற்போதைய அறிவிப்பின்படி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல் அலுவலர் நிலை-1 பணிக்கு 9 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது தோராயமான காலியிடங்களாகும். இந்த பணியிடங்கள் மாறுதலுக்கு உட்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 30 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்சமாக 37 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் உள்ளிட்டோர் என்றால் வயது வரம்பு என்பது இல்லை. விண்ணப்பத்தாரர்களின் வயது வரம்பு என்பது 01.07.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
கல்விதகுதி-சம்பளம்: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். சட்டப்படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.37,700 சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 500 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இந்து மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 11.11.2023ம் தேதிக்குள் tnpsc.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தை 16.11.2023 முதல் 18.11.2023 ம் தேதிக்குள் திருத்தம் செய்ய வேண்டும்.
தேர்வு கட்டணம்: இந்த பணிக்கான பதிவுக்கட்டணம் ரூ.150 ஆகும். தேர்வுக்கட்டணமாக ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. இஸ்லாமியர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 3 முறையும், முன்னாள் ராணுவத்தினர் 2 முறை கட்டணம் செலுத்த தேவையில்லை எனும் முறையை பயன்படுத்தி கொள்ளலாம்.
தேர்வு எப்போது: இந்த பணிக்கு எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 2024 ஜனவரி 6ம் தேதி காலை 9.30 மணிக்கு தாள் -1 கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வு மற்றும் பொது அறிவு தேர்வு நடத்தப்பட உள்ளது. அன்றைய தினம் மதியம் தாள் 2 இந்து சமயம் மற்றும் அறிலை கொடைகள் சட்டம் 1959 தொடர்பான தேர்வு நடைபெறும். தாள் 3 சட்ட தேர்வு 2024 ஜனவரி 7 ம் தேதி காலையில் நடைபெறும்.
பணி தொடர்பான அறிவிப்பை தமிழில் காண Click Here
பணி தொடர்பான அறிவிப்பை ஆங்கிலத்தில் காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications