நேர்முகத்தேர்வு கிடையாது.. 615 பணியிடங்கள்! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செம அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதவிப் பொறியாளர் (அமைப்பியல் / மின்னியல் / வேளாண் பொறியியல்) உள்ளிட்ட 47 பதவிகளுக்கான 615 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)-க்கான அறிவிக்கை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.

தமிழக அரசு துறையில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 615 பணியிடங்க்ளை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

tnpsc-recruitment-2025-combined-technical-services-examination-615-posts-how-to-apply-check-details

உதவிப் பொறியாளர் (அமைப்பியல் / மின்னியல் / வேளாண் பொறியியல்) உள்ளிட்ட 47 பதவிகளுக்கான 615 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)-க்கான அறிவிக்கை தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று (21052025) வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் 27.05.2025 முதல் 25.06.2025 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம். கணினி வழித் தேர்வு 04.08.2025 முதல் 10.08.2025 வரை நடைபெறும்.

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுகள் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) 2024-ம் ஆண்டு அறிவிக்கையில், இரண்டு நிதியாண்டுகளுக்கான 1236 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதாவது, ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 618 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) மூலம், ஒரு நிதியாண்டிற்கு (2025-2026) 615 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், 2025-ம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, அரசுத் துறை மற்றும் நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும். எனத் தெரிவித்து கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்சிஸ்டண்ட் என்ஜினியர், ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர், லைப்ரெரியன், கம்ப்யூட்டர் புரோகிராமர், ஜூனியர் பிளானர், புள்ளியியல் உதவியாளர் என 47 வகையான பணியிடங்களில் 617 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதியை பொருத்தவரை துறை சார்ந்த பிரிவில் என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 25.06..2025 கடைசி நாளாகும். விண்ணப்பங்களை திருத்த 29.06.2025 முதல் 01.07.2025 வரை அவகாசம் வழங்கப்படும். தேர்வுகள் வரும் 04.08.2025 முதல் 10.08.2025 வரை நடபெறும். தமிழ் தகுதி தேர்வு மற்றும் துறை சார்ந்த பாடப்பிரிவு கொண்ட எழுத்து தேர்வு நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+