Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. ஒரு வேலைக்கு 60 பேர் போட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள சுமார் 3 ஆயிரத்து 308 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். மொத்தம் உள்ள 3 ஆயிரத்து 308 காலிபணியிடங்களுக்கு இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது ஒரு வேலைக்கு சுமார் 61 பேர் போட்டியிடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 34,790 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 33,377 கடைகள் கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகிறது. இதில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள முழு நேரக் கடைகள் 18,782 ஆக உள்ளது. பகுதி நேர ரேஷன் கடைகள் 9,388 ஆக இருக்கிறது.

jobs ration shop job

ஆயிரம் முதல் ஆயிரத்து 500 குடும்ப அட்டைகள் கொண்ட முழு நேரக் கடைகள் 4,352 ஆகவும் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் பல ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தான் அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை, ஆயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கைரேகை பெற்று சரியான அளவுகளில் வழங்கி வருகிறார்கள். அதேபோல் அவ்வப்போது அரசு அறிவிக்கும் ரொக்கப்பரிசு, பொங்கல் பரிசு போன்ற பணிகளையும் ரேஷன் கடை பணியாளர்கள் தான் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் என 3 ஆயிரத்து 308 காலிப்பணியிடங்கள் இருக்கிறது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் 9-ந் தேதி அந்தந்த மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டது.இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். இதற்காக அந்ததந்த மாவட்டங்களுக்கு என்று உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கப்பட வேண்டும். உதாரணமாக கோவை என்றால், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

ரேஷன் கடைகளில் இரண்டு வகையான பணியிடங்கள் உள்ளன. இதில் விற்பனையாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்பு கல்வித் தகுதியும், கட்டுனர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு கல்வித் தகுதியும் வரையறுக்கப்பட்டு உள்ளது.நேற்று மாலை நிலவரப்படி சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருப்பதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வயது வரம்பு : 01.07.2024 தேதியின்படி, விண்ணப்பதார்கள் 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பொறுத்தவரை ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) மற்றும் இவ்வகுப்புகளைச் சார்ந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு கிடையாது.

இதர வகுப்பினர் (ஒசி) - 32 வயது, அனைத்து இனைத்தைச் சாரந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை, இதர வகுப்பினைச் (ஒசி) சார்ந்த முன்னாள் ராணுவத்தினர் - 50 வயது மற்றும் இதர வகுப்பினைச் சார்ந்த மாற்றுத் திறனாளிகள் - 42 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரக்ள் பிற மாநிலத்தவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்களாக இருப்பினும் இதர வகுப்பினராகவே கருதப்படுவார்கள் என்று கூட்டுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் எப்படி: விற்பனையாளர் பணிக்கு தொகுப்பு ஊதியம் ரூ.6,250 மாதம் வழங்கப்படும். ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.8,600 முதல் ரூ.29,000 வரை வழங்கப்படும். கட்டுநர் பணிக்கு தொகுப்பு ஊதியம் ரூ.5,500 மாதம் வழங்கப்படும். ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.7,800 முதல் ரூ.26,000 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை: விண்ணப்பதார்களின் 10 மற்றும் 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இட ஒதுக்கீடு மற்றும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நேரடியாக பணி நியமனம் செய்யப்படுவர். கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டிலும் சேர்த்து அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்தில் பணி நியமனம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அரசு ஒதுக்கீடு முறையில் ரேஷன் கடைகளில் பணி நியமனம் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+