நோ எக்ஸாம்.. மாதசம்பளம் ரூ.80,000.. தூத்துக்குடி துறைமுகத்தில் அசத்தலான வேலை.. தட்டித்தூக்க ரெடியா?
தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு என்ஜினீயரிங், டிகிரி, எம்பிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
தூத்துக்குடியில் வஉசி சிதம்பரனார் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது அந்த துறைமுகத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்ற தேவையான ஆட்களை தேர்வு செய்யும் வகையில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

தூத்துக்குடி வஉசி சிதம்பரனார் துறைமுகத்தில் மொத்தம் 5 பிரிவுகளில் 52 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி சீனியர் கன்சல்டன்ட் பணிக்கு 2 பேர், கன்சல்டன்ட் பணிக்கு 3 பேர், அசோசியேட் கன்சல்டன்ட் பணிக்கு 10 பேர், ப்ரோபஷனல் இன்டர்ன் (Intern) பணிக்கு 26 பேர், ஜூனியர் ப்ரோபஷனல் இன்டர்ன் பணிக்கு 11 பேர் என மொத்தம் 52 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் படிப்பை முடித்திருக்க வேண்டும். சிஏ, சிஎம்எஏ, பிஇ, பிடெக், பிஎஸ்சி, பிஏ, எம்சிஏ, எம்பிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்திருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
வேலை வாரியாக பார்த்தால் சீனியர் கன்சல்டன்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் சிஏ/சிஎம்ஏ படிப்பையும், கன்சல்டன்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரியும், அசோசியேட் கன்சல்டன்ட் பணிக்கு பட்டமேற்படிப்பும், ப்ரோபஷனல் இன்டர்ன் பணிக்கு டிகிரி, பிஇ, பிடெக், எம்சிஏ, எம்பிஏ படிப்பையும், ஜூனியர் ப்ரோபஷனல் இன்டர்ன் பணிக்கு டிப்ளமோ படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.
சீனியர் கன்சல்டன்ட் பணிக்கு ரூ.80 ஆயிரம், கன்சல்டன்ட் பணிக்கு ரூ.60 ஆயிரம் , அசோசியேட் கன்சல்டன்ட் பணிக்கு ரூ.50 ஆயிரம், ப்ரோபஷனல் இன்டர்ன் பணிக்கு ரூ.30 ஆயிரம், ஜூனியர் ப்ரோபஷனல் இன்டர்ன் பணிக்குரூ.20 ஆயிரம் என மாத சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 50 வயதுக்குள் இருக்க வேண்டும். இது ஒரு தற்காலிக பணியாகும். முதலில் ஓராண்டு பணியமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு 2 ஆண்டு வரை பணி நீட்டிப்பு வழங்க வாய்ப்புள்ளது. விண்ணப்பம் செய்வோர் மதிப்பெண் அடிப்படையில் நேர்க்காணலுக்கு அழைக்கப்பட்டு பணியில் சேர்க்கப்படுவார்கள். எழுத்து தேர்வு இல்லை.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் ஆப்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதாவது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டு இருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து The Secretary, V.O.Chidambaranar Port Authority, Administrative Office Building, Harbour Estate, Tuticorin - 628 004 என்ற முகவரிக்கு ஜூன் மாதம் 1ம் தேதிக்குள் உரிய ஆவணங்களை இணைத்து கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதவிறக்கம் செய்ய Click Here
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications