யூகோ வங்கியில் வேலை.. 250 ஆபிசர் பணியிடங்கள்.. 85,000 சம்பளம்.. டிகிரி தகுதிதான்! தேதி முடிய போகுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: யூகோ வங்கியில் 250 ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூகோ வங்கிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய் 80 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நாளைக்குள் விண்ணப்பித்து விடவும். ஏனென்றால் நாளை தான் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்று யூகோ வங்கி. கடந்த 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கியானது, மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 3,000க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் உள்ளது. இந்த வங்கிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு கை நிறைய சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கப்படும். இதனால் இந்த வங்கி பணியிடங்களுக்கு பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகிறார்கள்.

job jobs employment

அந்த வகையில் யூகோ வங்கியில் காலியாக உள்ள லோக்கல் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. மொத்தம் 250 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கான கல்வித்தகுதி என்ன, வயது வரம்பு எவ்வளவு, எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.

காலிப் பணியிடங்கள்: மொத்தம் 250 லோக்கல் ஆபிசர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. குறிப்பாக குஜராத்தில் 57, மகாராஷ்டிராவில் 70, அசாமில் 30, கர்நாடகாவில் 35, திரிபுராவில் 13, சிக்கிமில் 6 பணியிடங்களும் நாகலாந்தில் 5 மற்றும் மேகாலயாவில் 4, கேரளாவில் 15, தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 10, ஜம்மு காஷ்மீரில் 5 பணியிடங்கள் என மொத்தம் 250 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி: டிகிரி முடித்திருந்தால் போது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதும். கூடவே உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும். அதாவது கேரளாவில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பித்தால் மலையாளம் தெரிந்து இருப்பது அவசியம்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்ளுக்கு மாதம் ரூ. 48,480 - 85,920/-வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை: தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைன் டெஸ்ட், உள்ளூர் மொழித்தேர்வு / நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுகள் தமிழகத்திலும் நடைபெறும். கோவை, சென்னை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட நகரங்களில் தேர்வு நடைபெறும். தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ 850 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் ரூ.175 செலுத்தினால் போதும். விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கிய நாள்: 16.01.2025 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாளை 5 ஆம் தேதி ஆகும். நாளை ஒருநாள் மட்டுமே நேரம் இருப்பதால், விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து கொள்ளவும்.

தேர்வு அறிவிப்பை படிக்க: https://ucobank.com/documents/20120/458985/Advertisement+LBO_English.pdf/4b772c19-450f-ece3-5926-d2123e795d8c?t=1736958584378

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+