‛ஆண்களோடு பெண்களுக்கும் வாய்ப்பு’.. மத்திய ஆயுதப்படைகளில் பணியாற்ற சூப்பர் சான்ஸ்! மிஸ் பண்ணாதீங்க
சென்னை: மத்திய ஆயுதப்படையின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 506 உதவி கமாண்டன்ட் (Assistant Commandant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு டிகிரி முடித்த ஆண்களும், பெண்களும் விண்ணப்பம் செய்யலாம்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வெவ்வேறு படைப்பிரிவுகள் உள்ளன. இந்த படைப்பிரிவுகளுக்கு தேவையான ஆட்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகளுடன் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் யுபிஎஸ்சி எனப்படும் யுனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பில் மத்திய போலீஸ் ஆயுதப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:
காலியிடங்கள்: மத்திய ஆயுதப்படையில் 5 பிரிவுகளில் காலியாக உள்ள 506 உதவி கமாண்டன்ட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி பிஎஸ்எஃப் எனும் எல்லை பாதுகாப்பு படையில் 186 காலியிடங்கள், சிஆர்பிஎஃப் எனும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 120 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.
மேலும் சிஐஎஸ்எஃப் எனும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 100 இடங்கள் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் பிரிவில் (ஐடிபிஎஃப்) 58 காலியிடங்கள், எஸ்எஸ்பி படையில் (SSB or Sashastra Seema Bal) 42 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு ஆண்கள், பெண்கள் என இருவரும் விண்ணப்பம் செய்யலாம்.
வயது வரம்பு: வயது வரம்பு என்பது 2024 ஆகஸ்ட் 1ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். இந்த தேதியின் அடிப்படையில் விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சமாக 25 வயதுக்குள் இருக்க வேண்டும். அதன்படி விண்ணப்பத்தாரர்கள் 1999 ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 2004 ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும் தளர்வு வழங்கப்படும். அதேபோல் பிற பிரிவினருக்கும் அரசு விதிகளின் படி தளர்வு என்பது உண்டு.
கல்வி தகுதி: விண்ணப்பம் செய்வோர் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அரசு விதிகளின்படி நல்ல சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் upsconline.nic.in இணையதளம் மூலம் மே மாதம் 14ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு, மெடிக்கல் டெஸ்ட, மெரிட் லிஸ்ட் மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications