டிகிரி முடித்தவர்களா நீங்க? மத்திய அரசில் சூப்பர் ஜாப்.. 323 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது!
சென்னை: EPFO எனப்படும் மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் 323 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நாளை தான் விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்து கொள்ளவும்.
EPFO எனப்படும் மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் காலியாக உள்ள 323 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய பணியாளர் தேர்வு ஆணையமான யுபிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்காலம்? வயது வரம்பு என்ன? உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
நேர்முக உதவியாளர் என்ற பணியில் மொத்தம் 320 பேர் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்தப ணியிடத்திற்கான கல்வி தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். தட்டச்சு தெரிந்து இருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது தமிழில் ஒரு நிமிடத்தில் 120 வார்த்தைகள் அடிக்க வேண்டும். கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது நிரம்பியவர்களும் 30 வயதுக்கு மிகாதவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. ஒபிசி பிரிவினருக்கு 18 முதல் 33 வயது வரையும், எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் 18 முதல் 35வயது வரையும் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் 18 முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு கட்டணம்:
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலம். விண்ணப்ப கட்டணமாக ரூ. 25 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி/ எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. ஆன்லைன் மூலமாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வை பொறுத்தவரை நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும். புதுவையிலும் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
விண்ணப்பிக்க நாளையே அதாவது 27. 03. 2024 தான் கடைசி நாளாகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். எழுத்து தேர்வு வரும் 07. 07. 2024 நடைபெறும். தேர்வு அறிவிப்பினை படிக்க https://upsc.gov.in/sites/default/files/AdvtNo-51-2024-Spcl-PrsnAsst-engl-070324.pdf என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும்.
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications